Hair Growth Tips : ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.
மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, அதனால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. முடி உதிர்வை தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகப்படுத்தி நன்றாக வளர்வதற்கு இயற்கையான வழி உள்ளது.
Hair Growth Tips : தலைமுடி வளர டிப்ஸ்
தலையில் எண்ணை தேய்ப்பது, தேங்காய் பாய் தேய்த்து குளிப்பது அல்லது வெந்தயம் அரைத்து போட்டு பொடுகு வராமல் தடுப்பதன் மூலமும் முடி வளர்ச்சி அதிகரிக்கும், உதிர்வது குறையும். ஆனால் உள்ளே அருந்தும் உணவுகளும் நல்லதாக இருப்பது அவசியம். இளம் வயதில் ஏற்படும் முடி உதிர்வை தடுப்பது சுலபம். இயற்கையாக கிடைக்கும் சில உணவு பொருட்களை அப்படியே சாப்பிட்டு அல்லது சமையலில் சேர்த்துக் கொண்டால் கூந்தல் உதிர்வது நின்று, வளர்ச்சி பெறும்.
1. நெல்லிக்காய்
ஆயுர்வேத குணங்கள் கொண்ட நெல்லிக்காய் இரண்டு வகை உண்டு. நெல்லிக்காய் மற்றும் மலை நெல்லிக்காய். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது மலை நெல்லிக்காய் (பெரிய நெல்லி). இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளது. இது தலையில் ஏற்படும் அரிப்புகளை கட்டுப்படுத்தி, வளர்ச்சியை அதிகரிக்கும்.
2. பாலக் கீரை
குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கீரைகள் விரும்பி சாப்பிடுவது குறைவு ஆனால் கீரைகளில் கூந்தல் வளர செய்யும் நற்குணங்கள் உள்ளது. குறிப்பாக பாலக் கீரை சாப்பிடுவதால் அடர்த்தியான முடி வளரும். பாலக் கீரையில், வைட்டமின் பி, சி, இ மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. மேலும், இரும்புச்சத்து இந்த கீரையில் அதிகமாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து உடலில் ஓடும் இரத்தத்தின் மூலம் ஆக்சிஜன் சப்ளை தலை வரை சென்று சேர்க்கும். இதனால் முடி வேகமாக வளரும்.
3. வெந்தயம்
வெந்தயம்... எல்லா வீடுகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசியத் தேவை. வயிறு வலி, அஜீரனம், உடல் சூடு தனிப்பது போன்ற பலவற்றுக்கு மருந்தாக இருக்கும் இதே வெந்தயம் தான், தலைமுடிக்கு ஆகச் சிறந்த மருந்து. இதில் அதிகமான புரோட்டீன் மற்றும் நிசோடினிக் ஆஇச்ட் இருப்பதாக் முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். மேலும், தலை முடியை கனமாக வளர்ச் செய்யும், இதனால் பாதியிலேயே முடி உடைவது தடுக்கலாம்.
4. தேங்காய் எண்ணை
கேரள பெண்களுக்கு கறு கறுவென அழகான அடர்த்தியான முடி இருப்பதற்கு முக்கிய காரணம் தேங்காய் எண்ணை. தலையில் தேய்ப்பது மட்டுமின்றி உணவிலும் தேங்காய் எண்ணை பயன்படுத்தியே சமைக்கிறார்கள். தேங்காய் எண்ணையில், லாரிக் ஆசிட் அதிகமாக உள்ளது. இதனை தலையில் தேய்ப்பது மட்டுமின்றி உணவில் சேர்த்து சாப்பிட்டால் கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது. இந்த லாரிக் ஆசிட், தலை முடியில் இருக்கும் புரோட்டீன்களை இறுக்கமாக்கும். இதனால் முடி உடையாது, கனமாக அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.