Hair growth tips hair fall prevention homemade remedy : முடி உதிர்வைத் தடுக்க ஊட்டச்சத்துக்கள் முக்கியம். ஊட்டச்சத்துக்கள் குறைவடையும் போது உடலில் பல பிரச்சனைகள் தோன்றும். அதில் முடி உதிர்வும் ஒன்று. சத்தான காய்கறிகளான கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். இந்நிலையில், உறுதியான முடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை கொண்டு எப்படி பெறலாம் ?
கேரட்
இரண்டு அல்லது மூன்று கேரட்டை வேக வைத்து அரைத்து பின், அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்த்து 30 நிமிடத்திற்கு பின் முடியை அலச வேண்டும்.
வெங்காயம்
வெங்காய சாறுடன் இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் வெங்காய வாசனையை போக்க சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளலாம். இந்தக் கலவையை தலை முடியில் தடவி 40 முதல் 50 நிமிடம் வரை வைத்திருந்து கழுவவும்.
பூண்டு
பூண்டுச்சாறு, முடி வளர்ச்சிக்கு உதவும். எனவே பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
கொத்தமல்லி
புதிதாக நறுக்கப்பட்ட கொத்தமல்லி இலைகளின் சாறு எடுத்து அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேர ஊறவைத்துப் பின் முடியை அலசினால் முடி உதிர்வது குறையும்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்கினை துருவி சாறு எடுக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊறவைத்துப் பின் முடியை அலசவும்.
மேலும் படிக்க : Hair Growth: பச்சைக் கீரை, பழக் கூழ், கேரட்… கூந்தல் வளர்ச்சிக்கு எளிய உணவுகள்