hair growth, hair growth tips, how to control hair fall, jaggery meaning in tamil, முடி வளர, முடி உதிர்தல், கூந்தல்
Hair Growth Tips: இந்த ஊரடங்கு காலத்தில் முன்பு நினைத்துக் கூட பார்க்காத பல ரகசிய உட்பொருட்களை மக்கள் தங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்புக்காக கண்டுபிடித்துள்ளனர். இது நல்லது, மேலும் இயற்கையான மற்றும் வீட்டு வைத்தியம் எப்போதும் ஒப்பனை தீர்வுகளுக்கு விரும்பப்படுகிறது, ஏனென்றால் இயற்கையானது மிகவும் நீண்ட காலம் நீடிக்கும்
Advertisment
நல்ல தோல் மற்றும் ஆரோக்கியமான முடி தொடர்பான எல்லாவற்றிற்கும் வெல்லம் நல்லது. அது தொடர்பாக நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது. வெல்லத்தில் anti-oxidants மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது என்று நம்பப்படுகிறது. இவை free radicals எதிராக போராடக்கூடியது, மற்றும் முன்கூட்டிய வயதாகும் பிரச்சினையை தீர்க்கும்.
Hair growth by using jaggery: வெல்லம் கூந்தலுக்கும் சருமத்திற்கும் நல்லது
செரிமானத்திற்கும் வெல்லம் சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர், எனவே தான் மதிய சாப்பாட்டுக்கு பிறகு வெல்லத்தை சிறிது உட்கொள்கின்றனர். இது சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாகும், அதனால்தான் தேநீரை இனிப்பானதாக்க அதில் சேர்க்கப்படுகிறது.
Advertisment
Advertisements
ஆனால், வெல்லம் கூந்தலுக்கும் சருமத்திற்கும் நல்லது என்பதை நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள். சருமத்தின் சுருக்கங்களைக் குறைப்பதன் மூலம், இது சருமத்தை குறைபாடற்றதாக தோற்றமளிக்க செய்யும், மேலும் இது இயற்கையான பளபளப்பையும் கொடுக்கும். இது முகப்பரு மற்றும் பருக்களைக் குறைத்து கூந்தலை மென்மையானதாகவும் பளபளப்பானதாகவும் தோற்றமளிக்க செய்யும்.
தோல் பராமரிப்பு
இரண்டு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டி பொடித்த வெல்லத்தை கொண்டு ஒரு பேஸ்டை செய்யவும். இதை 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்துவிட்டு குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவவும். பிறகு தெரியும் பளபளப்பை கவனியுங்கள்.
உங்கள் முகப்பருவில் பயன்படுத்தி அதை அகற்ற வேண்டும் என்று நினைத்தால் சிறிது வெல்லப் பொடியை எடுத்து சிறிது எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தண்ணீரை அதனுடன் ஊற்றி ஒரு பேஸ்டாக செய்துக் கொள்ளவும். பாதிக்கப்பட்ட இடத்தில் அதை தினமும் தடவி வரவும் பலனை கண்கூடாக காணலாம்.
முடி பராமரிப்பு
வெல்லம் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பையும் மென்மையையும் தரும். இந்த தலைமுடி பூச்சை (hair mask) செய்ய, இரண்டு தேக்கரண்டி multani களிமண், இரண்டு தேக்கரண்டி வெல்லப் பொடி மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு பேஸ்டை செய்துக் கொள்ளவும். அதை நேரடியாக தலையில் மெதுவாக தடவி சிறிது நேரம் உலர வைக்கவும். பிறகு தண்ணீர் மற்றும் மைல்ட் ஷாம்பு கொண்டு அதை அலசவும். இதை வாரம் தோறும் செய்தால் மாற்றத்தை உணரலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil