நீங்கள் உங்கள் தலை அல்லது உடலை சாய்க்கும்போது, உச்சந்தலையில் மற்றும் ஹேர் ஃபாலிக்கிள்ஸுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதையொட்டி, உச்சந்தலையில் ஆக்ஸிஜன் சப்ளை அதிகரிக்கிறது. இது இறுதியில் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது, முடி உதிர்வை குறைக்கிறது.
அது மட்டும் இல்லை, போதுமான அளவு ஆக்ஸிஜனுடன், முடி வளர்ச்சியைத் தூண்டும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் இது வழங்குகிறது, என்று தோல் நிபுணர் டாக்டர் ப்ளாசம் கோச்சார் கூறினார்.
கூடுதல் நன்மைகளுக்காக, சிலர் தலையை சாய்க்கும் முன், தலையில் தேங்காய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்வார்கள் என்று மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் சங்கீதா திவாரி (clinical nutritionist, Artemis Lite, NFC, Delhi) கூறினார்.
அதை எப்படி செய்வது என்று டாக்டர் ப்ளாசம் கூறியது இங்கே
நீங்கள் தலையை கீழாகத் தொங்க விடுவதற்கு முன் 5-10 நிமிடங்களுக்கு ஏதேனும் எண்ணெய் கொண்டு உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இது ஹேர் ஃபாலிக்கிள்ஸூக்கு ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.
இப்போது மெதுவாக தொடங்குங்கள்.
நீங்கள் ஒரு ஹெட்ஸ்டாண்ட் செய்ய தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் படுக்கையின் ஒரு பக்கத்திலிருந்து உங்கள் தலையை ஒரு பக்கமாக தொங்கவிடலாம். இதை சோபாவில் கூட செய்யலாம்.
4-5 நிமிடங்கள் அப்படியே வைத்திருங்கள். மெதுவாக உங்கள் இயல்பான தோரணைக்கு வாருங்கள். உடனே எழும்ப வேண்டாம். இது உங்கள் நரம்புகள் அல்லது தசைகளுக்கு சேதம் விளைவிக்கும். உங்களுக்கு கழுத்து சுளுக்கு அல்லது ஹெட் ரஷ் கூட வரலாம்,” என்றார் டாக்டர் கோச்சார்.
பரிசீலனை
அதிகரித்த ரத்த ஓட்டம் முடி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கருத்து நியாயமானதாக இருந்தாலும், கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய புள்ளிகள் உள்ளன.
அறிவியல் சான்றுகள்
இந்த முறையை நேரடியாக முடி வளர்ச்சியுடன் இணைக்கும் வலுவான அறிவியல் ஆராய்ச்சியின் பற்றாக்குறை தற்போது உள்ளது. அதிகரித்த ரத்த ஓட்டம் பொதுவாக நன்மை பயக்கும் என்றாலும், இந்த குறிப்பிட்ட முறையின் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது என்று ஆய்வுகள் உறுதியாகக் காட்டவில்லை.
ஆனால் இதை நேரடியாக முடி வளர்ச்சியுடன் இணைக்கும் வலுவான அறிவியல் ஆராய்ச்சியின் பற்றாக்குறை தற்போது உள்ளது. அதிகரித்த ரத்த ஓட்டம் பொதுவாக நன்மை பயக்கும் என்றாலும், இந்த குறிப்பிட்ட முறையின் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது, என்று ஆய்வுகள் உறுதியாகக் காட்டவில்லை.
உங்கள் தலையை கவிழ்ப்பது மயக்கத்தை ஏற்படுத்தும், குறிப்பாக பழக்கமில்லாதவர்களுக்கு. மெதுவாகத் தொடங்கி உங்கள் உடலைக் கேளுங்கள். உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால், உடனடியாக நிறுத்துங்கள்.
கர்ப்பிணிப் பெண்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வெர்டிகோ, காது தொற்று அல்லது முதுகு/முதுகுத்தண்டு வலி உள்ளவர்களுக்கு தலைகீழ் முறை பரிந்துரைக்கப்படுவதில்லை. எந்தவொரு புதிய நுட்பத்தையும் முயற்சிக்கும் முன் எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும், குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் உடல்நலக் கவலைகள் இருந்தால்..
பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள், படிப்படியாகத் தொடங்குங்கள், உங்கள் உடலைக் கேளுங்கள் என்று திவாரி கூறினார்.
மனதில் வைக்க வேண்டியவை
அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சீரான உணவு ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. ஊட்டமளிக்கும் எண்ணெய்களுடன் உச்சந்தலையில் மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது (முடி வளர்ச்சிக்கு பங்களிக்கும்) மற்றும் ஆரோக்கியமான முடியை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட பல முடி பராமரிப்பு பொருட்கள் உள்ளன.
Read in English: Will hanging your head off the side of the bed result in hair growth?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“