What are causes of severe hair fall | How to Stop Hair Fall | கடுமையான முடி உதிர்வுக்கான காரணங்கள் என்ன | முடி உதிர்வை நிறுத்துவது எப்படி| முடி உதிர்தல் என்பது ஆண் பெண் இருபாலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை. மாசு மற்றும் மன அழுத்தம் முதல் போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் மோசமான முடி பராமரிப்பு போன்ற பல காரணங்களால் இது நிகழலாம். பெரும்பாலும் இது மீளக்கூடிய பிரச்சனையாகும்.
Advertisment
முடி உதிர்தலுக்கு என்ன காரணம்?
மன அழுத்தம், மயிர்க்கால்களை வளர்ச்சி சுழற்சியில் இருந்து வெளியேற்றுகிறது, இது முன்கூட்டிய முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஊட்டச் சத்து இல்லாத உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதால், இரும்பு, வைட்டமின் டி, பி12, துத்தநாகம், ஃபோலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற பல முக்கிய சத்துக்களின் குறைபாட்டை உருவாக்குகிறது.
நிகோடின் மற்றும் பிற மருந்துகள் தோல் மற்றும் முடிக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கலாம், இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
முடியைத் தொடர்ந்து பிளீச் செய்வது, ஸ்ட்ரெயிட்னிக் மற்றும் ஹேர் எக்ஸ்டன்ஷன்களை பயன்படுத்துதல் ஆகியவை வேர்களுக்கு சேதம் விளைவிக்கும், இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
முடி உதிர்தலை தடுக்க வழி
முடி உதிர்வைக் கட்டுப்படுத்த விலையுயர்ந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் பிற முடி பராமரிப்பு வைத்தியங்களை நாம் அடிக்கடி அணுகுகிறோம். முடி மற்றும் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம் என்றாலும், முடி உதிர்தலுக்கு உதவக்கூடிய காரணங்களைக் கண்டறிவது அவசியம். ஆரோக்கியமான மற்றும் அழகான முடிக்கு போதுமான ஊட்டச்சத்து மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அழகான முடிக்கு போதுமான ஊட்டச்சத்து மிகவும் அவசியம்
போதுமான தூக்கம், ஆரோக்கியமான முடி சுழற்சியை பராமரிக்க அவசியம். இது முடி ஆரோக்கியத்திற்கு முக்கியமான வளர்ச்சி ஹார்மோன்களையும் வெளியிடும். ஒவ்வொரு நாளும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பது முக்கியம். இது முடி செல்களை ஹைட்ரேட் செய்து உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மெலிந்த புரதங்கள், நட்ஸ் வகைகள், பருப்புகள், முழு தானியங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் நிறைந்த உணவைச் சேர்க்கவும், இது அத்தியாவசிய பி வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவற்றை வழங்குகிறது, இது முடிக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் உச்சந்தலையில் சுழற்சியை மேம்படுத்துகிறது.
முடி உதிர்வை கட்டுப்படுத்த நீங்களே வீட்டில் எளிதில் செய்யக்கூடிய சில குறிப்புகள் உள்ளன
செம்பருத்தி ஹேர் மாஸ்க்
செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும். இந்த பேஸ்டில் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தடவி ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு கொண்டு கழுவவும். சிறந்த பலன்களை பெற வாரத்திற்கு 1-2 முறை இதை பயன்படுத்தவும்.
கற்றாழை
கற்றாழை எடுத்து, நன்கு கழுவி அதன் ஜெல்லை உங்கள் உச்சந்தலையில் நேரடியாக தடவவும்.
1-2 மணி நேரம் அப்படியே இருக்கட்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காய சாற்றைப் பிரித்தெடுத்து, பருத்தி துணியால் உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
30-50 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, உங்கள் தலைமுடியை தண்ணீரில் கழுவவும். இந்த குறிப்பை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“