கொத்துக் கொத்தா முடி கொட்டுதா? ரெயின்போ ஃப்ரூட் சேலஞ்ச் டிரை பண்ணுங்க; டாக்டர் வேணி

பலவண்ணங்களை உடைய காய்கறிகளையும், பழங்களையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வண்ணம் என முறைப்படுத்தி கடைபிடிப்பதுதான் ரெயின்போ ஃப்ரூட் சேலஞ்ச். இதனை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பலவண்ணங்களை உடைய காய்கறிகளையும், பழங்களையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வண்ணம் என முறைப்படுத்தி கடைபிடிப்பதுதான் ரெயின்போ ஃப்ரூட் சேலஞ்ச். இதனை பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

author-image
WebDesk
New Update
rainbow challenge

கொத்துக் கொத்தா முடி கொட்டுதா? ரெயின்போ ஃப்ரூட் சேலஞ்ச் டிரை பண்ணுங்க; டாக்டர் வேணி

முடி உதிர்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவான பிரச்னையாக மாறிவிட்டது. பெரும்பாலும் மனஅழுத்தம், மரபணு, வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகள், கெமிக்கல் நிறைந்த பொருட்களின் பயன்பாடு, ஹேர் ட்ரையர் போன்றவை முடி உதிர்தலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், சுடு தண்ணீர் மற்றும் மாசு போன்ற சுற்றுச்சூழல் பிரச்னைகளும் முடி உதிர்தலுக்கு முக்கியக் காரணிகளாக இருக்கிறது.

Advertisment

முடி முழுமையாக வளர்ந்தபிறகு பெண்களுக்கு கிட்டத்தட்ட 100 மயிரிழைகளும், அதுவே ஆண்களுக்கு கிட்டத்தட்ட 50-லிருந்து 70 மயிரிழைகளும் உதிர்கிறது. ஆனால், முடி உதிர்தலின் எண்ணிக்கை இதைவிட அதிகரிக்கும்போது, அதாவது கொத்துக் கொத்தாக முடிகொட்டுதல் பிரச்னை என அழைக்கிறோம் என்கிறார் மருத்துவர் வேணி.

பகலில் வேலைக்கு செல்லும்போது தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ள விரும்பாதவர்கள், இரவில் தூங்கப்போகும்போது,  தலையில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஹெட் மசாஜ் செய்யலாம். இதனால், அந்தப் பகுதியில் ரத்தம் ஓட்டம் சீராகும். எனவே, முடி உறுதியாக பிடித்து அடர்த்தியாக வளர வாய்ப்புள்ளது. தினமும் இதனை செய்ய முடியாதவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் செய்தால் போதுமானது. 

என்ன வகையான உணவுகள் சாப்பிடலாம்?

Advertisment
Advertisements

கீரை வகைகள், அருகம்புல் ஜூஸ், பசலை கீரை, தூதுவளை, முள்ளங்கி கீரை. இதில் இரும்புச்சத்து இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பலவண்ணங்களை உடைய காய்கறிகளையும், பழங்களையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வண்ணம் என முறைப்படுத்தி கடைபிடிப்பதுதான்  ரெயின்போ ஃப்ரூட் சேலஞ்ச். ஒவ்வொரு வண்ணமும், ஒவ்வொரு உடல் பாகம் மற்றும் ஆற்றலுடன் தொடர்புடையது என்றும், அது ஒவ்வொரு ஊட்டச்சத்தை தருகிறது என்றும் கூறுகிறார்கள் இந்த வகை டயட் முறையை பின்பற்றுபவர்கள்

அதிக காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிடுவது எப்போதுமே ஒரு நல்ல யோசனையாக இருந்தாலும் , பலவிதமான வண்ணங்களை சாப்பிடுவதில் கவனம் செலுத்துவது, உங்கள் ஆரோக்கியத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயனளிக்கும். இந்த சேலஞ் முறையால், உங்கள் உடலுக்கு பலவிதமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் கிடைக்கிறது. மேலும் இவ்வகை சேலஞ்சில் அதிகப்படியான காய்கறிகளும், பழங்களும் உட்கொள்ளவதால், தேவையற்ற கொழுப்புகள் நீக்கப்பட்டு, உடல்எடை குறைகிறது. இதிலுள்ள நார்ச்சத்தும், புரத சத்தும், உங்கள் பசியை குறைக்கிறது. அதோடு, பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளதால், உங்கள் ஆரோக்கியம் மேம்படுகிறது.

நிறங்களும், நன்மைகளும்:

சிவப்பு: தக்காளி, தர்பூசணி, கொய்யா மற்றும் திராட்சை பழங்கள்- ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ,சி, மற்றும் கே 1 நிறைந்துள்ளது. அதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியம், சரும பாதுகாப்பு மேம்படும். அதோடு, சில புற்றுநோய்களின் ஆபத்தை குறைக்கலாம்.

ஆரஞ்சு மற்றும் மஞ்சள்: கேரட், சர்க்கரைவள்ளி கிழங்கு, மஞ்சள் குடைமிளகாய், வாழைப்பழங்கள், பரங்கிக்காய், அன்னாசி மற்றும் சோளம்- நார்ச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம், வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உங்கள் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியம் மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்க்கிறது.

பச்சை: கீரை, பாவக்காய், ப்ரோக்கோலி, பட்டர் ஃப்ரூட், பீன்ஸ், பச்சை பயறு, முட்டைகோஸ்-நார்ச்சத்து, ஃபோலேட், வெளிமம் (மக்னீஷியம்), பொட்டாசியம், வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்) மற்றும் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது. இதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் கிடைக்கும், அதோடு புற்று நோய், இதய நோய் அபாயத்தை நீக்கலாம்.

நீலம் மற்றும் ஊதா: ப்ளூபெர்ரி, பிளாக் பெர்ரி, கத்திரிக்காய் மற்றும் ப்ளம்ஸ்- நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் B6 , சி மற்றும் கே 1 நிறைந்துள்ளது. அதனால், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை, மூளை செயல்பாடு அதிகரிப்பு, ஆகியவற்றோடு நரம்பியல் கோளாறு, டைப் 2 நீரிழிவு மற்றும் புற்றுநோய்கள் ஆபத்தை குறைக்கலாம்.

அடர் சிவப்பு: பீட்ரூட்கள்- நார்ச்சத்து, ஃபோலேட், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் B6 நிறைந்துள்ளது. அதனால், ஆக்சிஜன் அதிகரிப்பு மூலம் தடகள செயல்திறனை அதிகரிக்கும், அதோடு, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவும்

வெள்ளை மற்றும் பழுப்பு: காலிஃபிளவர், பூண்டு, வெங்காயம், காளான்கள், முள்ளங்கி மற்றும் உருளைக்கிழங்கு - இதில், நார்ச்சத்து, ஃபோலேட், வெளிமம், மாங்கனீசு, பொட்டாசியம், வைட்டமின் B6 மற்றும் கே1 நிரம்பியுள்ளது. இது, அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிக்கவும், ஆக்ஸிஜனேற்றம் தரவும், உங்கள் பெருங்குடல் மற்றும் பிற புற்றுநோய்களின் ஆபத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யவும் உதவும்.

Best foods to prevent hair loss in summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: