Can sugar-sweetened drinks lead to hair loss in men?
சர்க்கரை-இனிப்பு பானங்களை உட்கொள்வதால் ஏற்படும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும், நியூட்ரியண்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், இந்த பொதுவான பானங்கள் –ஆண்களின் முடி உதிர்தலுடன் தொடர்புடையது, என்று பரிந்துரைத்துள்ளது.
Advertisment
இதில், சோடா, குளிர்பானங்கள், சர்க்கரை சேர்க்கப்பட்ட ஜூஸ், விளையாட்டு பானங்கள், ஆற்றல் பானங்கள், இனிப்பு பால் மற்றும் இனிப்பு தேநீர் / காபி உள்ளிட்டவை அடங்கும்.
பெய்ஜிங்கில் உள்ள Tsinghua பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சீனாவில் நடத்திய இந்த ஆய்வில், 13-29 வயதுக்குட்பட்டவர்களில் சர்க்கரை-இனிப்பு பானங்களின் (SSB) நுகர்வு அதிகமாக உள்ளது. சேர்க்கப்பட்ட சர்க்கரைகளின் (added sugars) முக்கிய உணவு ஆதாரமாக இருக்கும், இந்த சர்க்கரை-இனிப்பு பானங்கள் ஆண்களின் முடி உதிர்தலுக்கு ஒரு சாத்தியமான ஆபத்து காரணியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி கூறியது.
2022 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 18 முதல் 45 வயதுக்குட்பட்ட 1,028 சீன ஆண்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் முடி உதிர்தலை, ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில், குறைந்தது ஒரு சர்க்கரை கலந்த பானத்தையாவது உட்கொள்ளும் பழக்கம் உள்ள 30 சதவீத ஆண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனைகள் பொதுவானதாக இருப்பதை கண்டறிந்தனர்.
Advertisment
Advertisements
18-45 வயதுடைய சீன இளைஞர்களிடம் அதிக SSB நுகர்வு இருப்பதை நாங்கள் காட்டியுள்ளோம், மேலும் அதிகமாக சர்க்கரை-இனிப்பு பானங்களின் நுகர்வுகளை உட்கொள்பவர்கள், முடி உதிர்தலைப் புகாரளிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம், என்று அவர்கள் கூறி முடித்தனர்.
சர்க்கரை-இனிப்பு பானங்கள் மற்றும் ஆண்களுக்கு முடி உதிர்தல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை கூடுதல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும், ஏனெனில் இரண்டிற்கும் இடையிலான தொடர்பு குறித்த தொற்றுநோயியல் ஆய்வுகள் இன்னும் போதுமானதாக இல்லை.
சர்க்கரை-இனிப்பு பானங்களுக்கும், ஆண்களுக்கு முடி உதிர்தலுக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் தெளிவாக இல்லை என்று பெங்களூரு தோல் மருத்துவ ஆலோசகர் சுதீந்திர ஜி உட்பால்கர் கூறினார். இந்த பானங்களில் உள்ள அதிக சர்க்கரை உள்ளடக்கம், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சும் உடலின் திறனைப் பாதிப்பதன் மூலம் முடி உதிர்தலுக்கு பங்களிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
முடி உதிர்வைத் தடுக்க, வைட்டமின் சி, இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது முக்கியம். கூடுதலாக, சர்க்கரை மற்றும் ஃபிஸி பானங்களை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதும் முடி உதிர்வு அபாயத்தைக் குறைக்க உதவும் என்று அவர் கூறினார்.
பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ள உணவை உட்கொள்வது ஆரோக்கியமான கூந்தலைப் பராமரிக்க நன்மை பயக்கும் என்று டாக்டர் உட்பால்கர் கூறினார்.
முடி உதிர்தல் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவ மற்றும் உணவுமுறை வரலாற்றை பரிசோதிக்க வேண்டும், மேலும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான ஆபத்து காரணிகளை சரிபார்க்க உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று உணவியல் நிபுணர் சுமையா ஏ கூறினார்.
வகை 2 நீரிழிவு நோய் தலையின் கிரீடப் பகுதியைச் சுற்றி கடுமையான முடி உதிர்தல் அபாயத்துடன் தொடர்புடையது. அதிக சர்க்கரை உட்கொள்வது உங்கள் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது, இது முடி வேர்களை சேதப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்தலை துரிதப்படுத்துகிறது. மேலும், சர்க்கரை நம்மை அடிமையாக்குகிறது, இது பசியுணர்வு மற்றும் வீக்கம் போன்ற உணர்வுடன் தீவிர பசியை ஏற்படுத்துகிறது, என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“