/tamil-ie/media/media_files/uploads/2020/07/template-2020-07-14T162858.610.jpg)
கருவேப்பிலை எண்ணெய்: எத்தனை பலன்கள்?
Hair Loss Tamil News: இளவயது நரை முன்பை விட இப்போது மிகவும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது, அதில் பெரும்பாலானவை கட்டுப்படுத்தக் கூடியது. மன அழுத்தம், உடல் சூடு, அழகுசாதன பொருட்கள் பயன்பாடு, வெயிலில் அதிக நேரம் சுற்றுவது ஆகியவை இளவயது நரை ஏற்படுவதற்கான சில காரணங்கள்.
ஆனால் தொடக்கநிலையிலேயே இந்த பிரச்சனைகளை சரிசெய்யலாம். கறிவேப்பிலை கொண்டு செய்யப்படும் எண்ணெயை தலைமுடியில் பயன்படுத்துவதன் மூலம் மயிர்கால்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் இதனால் இளநரை தடுக்கப்படும். மேலும் புதிதாக முளைக்கும் தலைமுடியும் அடர்த்தியாக வளரும்.
curry leaves oil: இந்த தலைமுடி எண்ணெயை செய்ய தேவையான பொருட்கள்
* இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
* 10-12 கறிவேப்பிலை இலைகள்
தயாரிக்கும் முறை
* தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்
* சூடாகிய பிறகு அடுப்பை அனைத்துவிட்டு கறிவேப்பிலை இலைகளை அதில் போடவும்.
* அதை அப்படியே 20 நிமிடங்கள் ஆர விடவும். இதனால் கறிவேப்பிலை இலையில் உள்ள சாறு எண்ணெயில் நன்றாக இறங்கும்.
* நன்றாக ஆரிய பிறகு எண்ணெயை தலையில் நன்றாக மயிர்கால்களில் படும்படி அழுத்தி மசாஜ் செய்யவும்.
* இரண்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தலையில் எண்ணெய் ஊறிய பிறகு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பூ கொண்டு நன்றாக தலையை தேய்த்து கழுவவும். உங்கள் தலை முடியை condition செய்ய மறக்காதீர்.
* இந்த எண்ணெயை தலையில் தேய்ப்பதற்கு முன்பு அதில் சில சொட்டு வைட்டமின் ஈ எண்ணெயயும் சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.