hair growth vitamin, hair fall reason, hair fall tamil news, how to prevent hair fall, Hair loss, Hair loss prevention, முடி உதிர்தல், பொடுகு, தலைமுடி
Hair loss tamil news: நாம் ஒரு மாதத்துக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். நமக்கு நேரம் இருந்தாலும் நாம் இயற்கை ஆரோக்கியத்தில் முதலீடு செய்கிறோமா அல்லது கனமான இரசாயன தயாரிப்புகளை பயன்படுத்துகிறோமா? நமது தலைமுடியை பொருத்தவரை இரவு நேரத்தில்தான் ஊட்டச்சத்துக்களை உட்கொண்டு அது புத்துணர்வு பெறுகிறது. நல்ல தூக்க பழக்கம் மற்றும் இரவு நேர வழக்கங்கள் நமது தலைமுடி நுனி முதல் வேர் வரை உறுதியாக முக்கிய பங்கு வகிக்கின்றன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இப்போது, கூந்தலுக்கான சரியான இரவு நேர வழக்கங்கள் என்ன? வேறு ஒன்றும் இல்லை, நல்ல அளவிலான தூக்கம் மற்றும் இரவு முழுவதும் நீடிக்கக் கூடிய கூந்தலுக்கான சிகிச்சைகளை பயன்படுத்துவது ஆகியவை குறைபாடற்ற முடியை தினமும் காலையில் கொடுக்கும், என தொழிநுட்ப பயிற்சியாளர் John Paul Mitchell Systems India குறிப்பிடுகிறார்.
Advertisment
Advertisements
எந்தவொரு இடையூறும் இல்லாமல் முடி தன்னை வளர்த்துக் கொள்ள நிறைய நேரம் எடுக்கும். அரோக்கியமான தலைமுடியை பெறுவதற்கு மன இறுக்கமும், மன அழுத்தமும் ஆகிய இரண்டையும் சமாளிக்க வேண்டும். இளைய வயதில் மக்கள் முடி இழக்க அல்லது சேதமடைந்த மற்றும் நரை முடியை சமாளிக்க முனைகிறார்கள். இது போன்ற பிரச்சினைகள் உங்கள் தலைமுடிக்கு சரியான வழக்கத்தை பின்பற்றாததன் விளைவாகும் என்று Kamdar குறிப்பிட்டார்.
ஆரோக்கியமான முடி இழைகளுக்கு உங்கள் இரவு நேர வழக்கத்தில் நீங்கள் சேர்க்கக்கூடிய சில ஆரோக்கியமான மற்றும் எளிதான உதவிக்குறிப்புகள் இவை.
கூந்தலை ஹைட்ரேட் செய்து தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கவும்
தேயிலை மரம் மற்றும் லாவெண்டரின் சாறுகள் அடங்கிய ஆறுதல்படுத்தும் (soothing) எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் ஈரப்பதமான, மென்மையான மற்றும் நிம்மதியான இரவு தூக்கத்தைப் பெறலாம்.
கோடைகாலத்தில் இது முதன்மையானது இதில் jojoba அடங்கியிருப்பதால், தேயிலை மர எண்ணெய் ஒரு ஆறுதல்படுத்தும் முகவர் போல செயல்படுகிறது மேலும் லாவெண்டரின் வாசனை மனதை அமைதிப்படுத்தும். உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை சரிசெய்ய, பாதுகாக்க மற்றும் ஆழமாக நிலைநிறுத்த இது சிறந்தது.
நீங்கள் தூங்கும் போது கூந்தலை பராமரியுங்கள்
சிறிது கற்றாழையுடன் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம், ஒப்பனைக்காக பயன்படுத்தும் hair-dryers, flat irons மற்றும் curling irons ஆல் ஏறபடக்கூடிய தினசரி சூட்டிலிருந்து ஒரே நாள் இரவில் மீளலாம். தேங்காய் எண்ணெய் சேதமடைந்த இழைகளை சரிசெய்கிறது, ஈரப்பதத்தை நிரப்புகிறது மற்றும் மென்மையாக்குகிறது மேலும் எதிர்கால சேதத்திலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
மன இறுக்கத்திலிருந்து விடுபடுங்கள்
உங்கள் தலைமுடிக்கு எந்தவொரு வழக்கத்தையும் கடைப்பிடிப்பதற்கு முன், அமைதியாக இருக்கவும், நல்ல மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் தியானம் செய்வது அவசியம். இது உண்மையில் அனைவருக்கும் கடினமான நேரம், ஆனால் நாம் இன்னும் பாஸிட்டிவ்வாக இருந்து ஆரோக்கியமான உடலை பராமரிக்க முடியும். சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் சரியான சுகாதாரத்தை பின்பற்றுவதன் மூலம் இதை பராமரிக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil