/indian-express-tamil/media/media_files/DohNrLTimvO95upuIPX5.jpg)
DIY Hair Spa Treatment at home
ஹேர் ஸ்பா என்பது உங்கள் தலைமுடிக்கு ஓய்வு அளிக்கும் சிகிச்சை மட்டுமல்ல, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஊட்டமளிக்கும் ஒன்றாகும். பியூட்டி பிளாகர் பாவனா மெஹ்ரா இங்கு ஹேர் மாஸ்க் செய்முறையைப் பகிர்ந்துள்ளார்.
உங்கள் ஹேர் ஸ்பா தேவைகளை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி பொடிகள் உங்கள் தலைமுடிக்கு அதியசங்களை செய்யும்.
இந்த மூன்றும் "முடி பராமரிப்புக்கான கனவுக் குழுவை" உருவாக்குகிறது.
நெல்லியில் வைட்டமின் சி உள்ளது, இது முடி வளர்ச்சிக்கு சிறந்தது. கரிசலாங்கண்ணி கூந்தலுக்கான ஆயுர்வேத மூலிகைகளின் ராஜாவைப் போன்றது, மேலும் செம்பருத்தி உங்கள் தலைமுடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும், என்று மெஹ்ரா மேலும் கூறினார்.
ஹேர் மாஸ்க் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
1 ஸ்பூன் – நெல்லி பொடி
1 ஸ்பூன் - கரிசலாங்கண்ணி
1 ஸ்பூன் - செம்பருத்தி பொடி
ஊறவைத்த வெந்தய தண்ணீர்
2-3 நாட்களுக்கு செப்புப் பாத்திரங்களில் சேமித்த தயிர்
எப்படி செய்வது?
சிறிதளவு தண்ணீரில் சம அளவு பொடிகளை கலக்கவும். கலவையில் தயிர் அல்லது வெந்தய தண்ணீரை சேர்க்கவும்.
வீட்டில் ஒரு மினி ஸ்பா சிகிச்சைக்காக ஊற வைத்த வெந்தய நீர் அல்லது2-3 நாட்களுக்கு செம்புப் பாத்திரத்தில் சேமித்த புளித்த தயிரைப் பயன்படுத்த நான் அறிவுறுத்துகிறேன். இது வேலை செய்கிறது. என் தலைமுடி வலுவாகவும், பளபளப்பாகவும் தெரிகிறது, என்று மெஹ்ரா கூறினார்.
டாக்டர் ரிங்கி கபூர் (consultant dermatologist, cosmetic dermatologist, and dermato-surgeon, The Esthetic Clinics) கூறுகையில், ‘கரிசலாங்கண்ணி முடி உதிர்தலைத் தடுக்கவும், முன்கூட்டிய நரைப்பதைத் தடுக்கவும், ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயத்தில் புரோட்டீன்கள் மற்றும் நிகோடினிக் அமிலம் நிறைந்துள்ளது, இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது, ஹேர் ஃபாலிக்கிள்ஸை வலுப்படுத்துகிறது மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுக்கிறது.
இந்த பொருட்களைக் கலந்து ஒரு சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க் அல்லது எண்ணெய் தயாரிக்கலாம், இதை உச்சந்தலையிலும் முடியிலும் பயன்படுத்தலாம்.
இருப்பினும், காப்பர்வேர் செட் தயிர் சேர்த்துது நன்மைகளை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை’, என்று டாக்டர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.