தயிர், மிளகு, இலவங்கப்பட்டை பொடி: விரைவான முடி வளர்ச்சிக்கு அரோமோ தெரபிஸ்ட் சொல்லும் 'ஹேர் மாஸ்க்'

முடி உதிர்தல், உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் கரடுமுரடான மற்றும் உதிர்ந்த முடி போன்ற பல்வேறு முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தயிர் ஒரு விருப்பமாக கருதப்படுகிறது

முடி உதிர்தல், உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு மற்றும் கரடுமுரடான மற்றும் உதிர்ந்த முடி போன்ற பல்வேறு முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தயிர் ஒரு விருப்பமாக கருதப்படுகிறது

author-image
WebDesk
New Update
Hair mask

Hair Care

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கூந்தல் பளபளப்பாக இருக்க தயிர் தடவுவதன் நன்மைகள் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் எப்போதாவது தயிர், இலவங்கப்பட்டை பொடி மற்றும் மிளகுத் தூள் பயன்படுத்துவதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Advertisment

டாக்டர் மனோஜ் தாஸ், மேற்கூறிய ஹேர் பேக் முடி வளர்ச்சிக்கு உதவும்.

ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், ”4 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூளுடன் நன்கு மிக்ஸ் செய்து, நான்கு மணி நேரம் ஒதுக்கி வைக்கவும்.

முடியில் தடவும் போது 1 ஸ்பூன் மிளகுத் தூள் சேர்க்கவும். பேக்கை 45 நிமிடங்கள் வைத்திருந்து பின் லேசான ஷாம்பு கொண்டு கழுவவும். இந்த  என்சைம்கள் முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன. வாரம் ஒருமுறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தவும். 3-4 வாரங்களில் நீங்கள் முடிவுகளைப் பார்க்கத் தொடங்குவீர்கள்,” என்று டாக்டர் தாஸ் கூறினார்.

Advertisment
Advertisements

இது உண்மையில் வேலை செய்யுமா?

டாக்டர் ஷரீஃபா சவுஸ் (dermatologist and cosmetologist, Shareefa’s Skin Care Clinic) கூறுகையில், தயிர் கூந்தலில் அதிசயங்களைச் செய்வதாக அறியப்படுகிறது, ஏனெனில் வறண்ட மற்றும் உதிர்ந்த முடியை மேம்படுத்த உதவுகிறது.

முடி உதிர்தல், உச்சந்தலையில் அரிப்பு, பொடுகு, கரடுமுரடான மற்றும் உதிர்ந்த முடி போன்ற பல்வேறு முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தயிர் ஒரு விருப்பமாக கருதப்படுகிறது.

hair mask

தயிரில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் பொடுகைக் குறைக்க பெரிதும் உதவும் என்று சிலர் நம்புகின்றனர். இதேபோல், இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு தூள் கூட தலைமுடிக்கு பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், பக்க விளைவுகளைப் புரிந்து கொள்ளாமல் இதை பயன்படுத்துவது நல்ல யோசனையல்ல.

இந்த ஹேக் உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் தோலை சேதப்படுத்தும். கருப்பு மிளகு அதிகமாகவோ அல்லது நேரடியாகவோ பயன்படுத்தினால் உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் சொறி ஏற்படலாம். சில ஒவ்வாமை அல்லது சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்கள் இலவங்கப்பட்டை பொடியை உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது சிவத்தல் மற்றும் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும், என்று டாக்டர் சவுஸ் கூறினார்.

இலவங்கப்பட்டை கணிக்க முடியாதது மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது என்பதால் அதைத் தவிர்ப்பது சிறந்தது என்று டாக்டர் மேக்னா மோர் வலியுறுத்தினார். (aesthetic dermatologist, trichologist and cosmetologist, founder, Skuccii Supercliniq)

எனவே, மக்கள் தங்கள் தலைமுடிக்கு புதிதாக எதையும் முயற்சிக்கும் முன், மேலும் சிக்கல்களைத் தவிர்க்க மருத்துவர் அல்லது நிபுணர்களை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உச்சந்தலையில் இந்த பொருட்களைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக இருங்கள், என்று டாக்டர் சாஸ் எச்சரித்தார்.

 Read in English: Aroma therapist says applying curd, pepper, cinnamon powder pack can improve hair growth in 3-4 weeks; experts weigh in

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: