முடி உதிர்வை கட்டுப்படுத்த வாரத்திற்கு ஒரு முறை சின்ன வெங்காயத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!
முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சின்ன வெங்காயத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என இந்த செய்தி குறிப்பில் நாம் பார்க்கலாம். இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
இளம் தலைமுறையினரிடம் முடி உதிர்வு பிரச்சனை பெருமளவு அதிகரித்து வருகிறது. ஆண், பெண் என பாலின பேதமின்றி அனைத்து பாலினத்தவரும் முடி உதிர்வால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணங்கள் நிறைய இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
உதாரணத்திற்கு, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, சரியான தூக்கம் இல்லாதது, மிக நீண்ட நேரமாக அலுவலக வேலையில் ஈடுபடுவது, மன அழுத்தம் என்று பல காரணங்கள் முடி உதிர்வை உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சிம்பிளான ஹேர்மாஸ்க் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்த முடியும். இதனை செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும் என்ற தயக்கமும் வேண்டாம். இரண்டு பொருட்களை மட்டும் வைத்து இதனை செய்யலாம்.
முதலில் நம் தலை முடிக்கு தேவையான அளவு சின்ன வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வெங்காய சாறை அரிசி தண்ணீருடன் சேர்த்து கலந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தால் சிம்பிளான ஹேர்மாஸ்க் தயாராகி விடும்.
Advertisment
Advertisements
இந்த ஹேர்மாஸ்கில் சிறிய துண்டு காட்டனை நனைத்து அதனை, தலைமுடியின் வேர்ப்பகுதியில் படும் வகையில் தேய்க்க வேண்டும். இவ்வாறு தேய்த்ததும் தலையில் மெலிதாக மசாஜ் செய்ய வேண்டும். இதன் பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம்.
இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் முடி உதிர்வு பிரச்சனை குறையத் தொடங்கும். பெரும்பாலான ஷாம்புக்கள், ஹேர் சீரம் போன்றவற்றில் மூலப்பொருளாக சின்ன வெங்காயத்தின் சத்துகள் சேர்க்கப்படுகின்றன. அந்த வகையில் சின்ன வெங்காயத்தை கொண்டு இயற்கையான ஹேர் மாஸ்கை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
நன்றி - Sarans Hospitals Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.