இனி பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டாம்; வீட்டிலேயே உங்கள் தலை முடியை சில்கி ஸ்மூத்தாக மாற்றலாம்!

நம் தலை முடியை சில்கி ஸ்மூத்தாக மாற்றுவதற்கு வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தக் கூடிய சூப்பரான ஹேர்மாஸ்க் குறித்து பார்க்கலாம். இதனை எளிதாக செய்ய முடியும்.

author-image
WebDesk
New Update
Smooth hairmask

தலை முடியை பொறுத்தவரை தற்போது இரண்டு விதமான பிரச்சனைகள் நிலவுகின்றன. ஒன்று முடி உதிர்வு; மற்றொன்று இருக்கும் முடி அடர்த்தியாகவும், சில்கி ஸ்மூத்தாகவும் இல்லாமல் இருப்பது.

Advertisment

தலை முடியை பளபளப்பாகவும், சாஃப்டாகவும் பராமரிப்பதற்கு பியூட்டி பார்லர் அல்லது சலூனுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், நம் வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு சுலபமாக ஹேர்மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் பொருட்களில் இரசாயனம் சேர்க்காததால் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் போன்றவையும் ஏற்படாது.

அந்த வகையில், நன்கு பழுத்த இரண்டு வாழைப்பழங்களை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் கற்றாழை ஜெல்லை ஆறு முறை கழுவி சேர்க்க வேண்டும். இவை இரண்டுடன் ஒரு சிறிய கப் அளவிற்கு தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் நம் தலை முடியை சில்கி ஸ்மூத்தாக மாற்றக் கூடிய ஹேர்மாஸ்க் தயாராகி விடும். இதனை தலை முடியில் தேய்த்து இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின்னர், 10 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு செய்தால் தலை முடி பளபளப்பாகவும், சாஃப்டாகவும் மாறிவிடும்.

Advertisment
Advertisements

வாழைப்பழம் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதற்கும், அதன் வளர்ச்சியை தூண்டுவதற்கும் உதவி செய்கிறது. இதேபோல், கற்றாழை, தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் ஆகியவற்றில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. எனவே, இவை தலை முடியை ஸ்மூத்தாக மாற்றுவதுடன், அவற்றின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

நன்றி - Food and Glow Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Hair Care routine for long and thick hair Simple hair care tips for summer

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: