/tamil-ie/media/media_files/uploads/2023/08/Hair.jpg)
Hair oil recipe for growth
உங்கள் தலைமுடியின் அமைப்பை மேம்படுத்துவதாக உறுதியளிக்கும் “மேஜிக்கல் ஹேர் ஆயில்” ரெசிபியை செஃப் மேக்னா கம்தார் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
உங்கள் தலைமுடியை நிறைய ரசாயனங்கள் கொண்டு ஸ்டைல் செய்தால், உங்கள் தலைமுடியைப் பராமரிக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்துங்கள்.
நான் இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை என் தலைமுடிக்கு தடவுகிறேன். முடி உதிர்வைக் குறைக்கவும், முடியை வலுப்படுத்தவும், அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. வழக்கமான பயன்பாட்டிற்குப் பிறகு என் தலைமுடி மிகவும் மிருதுவாகிவிட்டதாக உணர்கிறேன். இதோ செய்முறை என்று அவர் எண்ணெய்க்கான செய்முறையைப் பகிர்ந்து கொண்டார்.
தேவையான பொருட்கள்
- 500 மில்லி தேங்காய் எண்ணெய்
- 7-8 நெல்லிக்காய்
- 1 டீஸ்பூன் வெந்தயம்
- 1 டீஸ்பூன் நைஜெல்லா விதைகள் (Nigella Seeds)
- 10 செம்பருத்தி மலர்கள்
- சில கறிவேப்பிலை
செய்முறை
முதலில் தேங்காய் எண்ணெய்யை மிதமான தீயில் சூடாக்கவும். நெல்லிக்காய், கறிவேப்பிலை, வெந்தயம் மற்றும் நைஜெல்லா விதைகள் சேர்க்கவும். இதை இரண்டு முறை கொதிக்க வைக்கவும். இப்போது அடுப்பை அணைத்து, சூடான எண்ணெயைக் கிளறிக் கொண்டே இருக்கவும். ஆறியதும் பூக்களை சேர்க்கவும். இப்போது எண்ணெயை மூடி இரவு முழுவதும் வைக்கவும். 24 மணிநேரம் வைப்பது நல்லது. அதை வடிகட்டி பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
சிறந்த முடிவுகளுக்கு இதை உங்கள் தலைமுடிக்கு தவறாமல் தடவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.