பொடுகு, முடி உதிர்வு, இளநரை என அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு; இந்த ஹேர்பேக்கை யூஸ் பண்ணுங்க!
பொடுகு, முடி அடர்த்தியின்மை என அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரே ஹேர் பேக் பயன்படுத்துவதன் மூலம் நம்மால் தீர்வு காண முடியும். அதனை தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
இன்றைய தலைமுறையினர் மேற்கொண்டு வரும் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தால் பலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. மேலும், நீண்ட நேரம் கணினி பயன்படுத்துவது, அடிக்கடி துரித உணவுகள் சாப்பிடுவது ஆகியவை உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்துகிறது.
Advertisment
இவ்வாறு உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது, அவை சருமத்தில் வறட்சி தன்மையை உருவாக்குகிறது. இது பொடுகு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. பொடுகு தொல்லையால் முடி உதிர்வு மற்றும் முடியில் அடர்த்தின்மை ஆகியவை ஏற்படுகிறது.
இது போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் வெவ்வேறு விதமான ஷாம்பூக்கள், ஹேர் சீரம் போன்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவது சிரமமாக இருக்கும். ஆனால், வீட்டில் நாம் தயாரிக்கும் சிம்பிளான ஹேர் பேக் கொண்டு இத்தகைய அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மால் தீர்வு காண முடியும்.
அந்த வகையில் 10 செம்பருத்தி இலைகள், ஊற வைத்த வெந்தயம் அரை கப், ஒரு ஸ்பூன் தயிர், எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து பசை பதத்திற்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த ஹேர் பேக்கை நம் தலை முடியில் நன்றாக தேய்த்து விட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த வேண்டும். இதனை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது பொடுகு தொல்லை, முடி உதிர்வு, இளநரை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்.
இது போன்று வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர்பேக்கை பயன்படுத்துவதால், இதில் இரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வாமை, பக்க விளைவுகள் ஆகியவை ஏற்படும் சாத்தியக் கூறுகளும் கிடையாது.
நன்றி - Bhavani Trendy Vlogs Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.