அரிசி வடித்த கஞ்சியில் இதை மட்டும் சேர்த்தால் போதும்; முடியை அடர்த்தியாக வளரச் செய்ய நடிகை ரேகா டிப்ஸ்
முடி வளர்ச்சியை அடர்த்தியாக்குவதற்கு நடிகை ரேகா சூப்பரான டிப்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்த டிப்ஸை பின்பற்றுவது மிகவும் சுலபமாக இருக்கும் எனவும், எல்லோராலும் எளிதாக செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சினிமா நட்சத்திரங்களின் சிகை அலங்காரம் எப்போதும் சாமானிய மக்களை ஈர்ப்பதாகவே இருக்கும். இன்றளவும் முடி வெட்ட செல்லும் இளைஞர்கள் பலர் ஏதோவொரு நடிகரின் பெயரைச் சொல்லி அதே ஸ்டைலில் முடி வெட்டுமாறு கூறுகின்றனர். பெண்களும் தங்களுக்கு பிடித்தமான நடிகைகளை போல சிகை அலங்காரம் செய்து கொள்ள விரும்புகின்றனர்.
Advertisment
ஆனால், தற்போதைய சூழலில் நிறைய பேருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாக தங்களுக்கு பிடித்த மாதிரி முடி வெட்டிக் கொள்ள முடிவதில்லை என பலரும் வருத்தம் கொள்கின்றனர். அப்படி இருக்கும் போது, நடிகை ரேகா தான் பின்பற்றும் சூப்பரான ஹேர் கேர் டிப்ஸை தெரிவித்துள்ளார்.
அதன்படி, வீட்டில் சாதம் வடிக்கும் போது அதன் கஞ்சியை தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர கடையில் இருந்து வைட்டமின் இ மாத்திரைகளையும் வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை மிகக் குறைவாகவே இருக்கும். இப்போது அரிசி வடித்த கஞ்சியுடன், இந்த மாத்திரைக்குள் இருக்கும் மருந்தை சேர்த்து கலக்க வேண்டும்.
நம் முடிக்கு தேவையான அளவு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும். இந்த ஹேர்பேக்கை நம் தலை முடியின் மீது ஸ்ப்ரே செய்த பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து தலைக்கு நாமே மசாஜ் செய்ய வேண்டும். இதையடுத்து குளித்து விடலாம்.
Advertisment
Advertisements
இப்படி தொடர்ச்சியாக செய்யும் போது நம் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், முடி பளபளப்பாக இருக்கும் என்றும் நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.