முடி உதிர்வு பிரச்சனை என்பது தற்போது பலருக்கும் உள்ளது. உடல் நிலையில் மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் என பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம். எனினும், பலருக்கு பொடுகு பிரச்சனை இருப்பதால் முடி உதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பொடுகு தலை முடியில் பாதிப்பை ஏற்படுத்துவதை போன்று, முகப்பருக்களையும் உண்டாக்குகிறது.
இந்த பொடுகு பிரச்சனையை வீட்டில் தயார் செய்த ஹேர் பேக் கொண்டு எப்படி போக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, குப்பைமேனி, பொடுதலை, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தலையில் தேய்த்து விட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்தால், பொடுகு பிரச்சனை குறையத் தொடங்கும்.
இதேபோல், சின்ன வெங்காயம் அல்லது பூண்டு ஏதாவது ஒன்றை அரைத்து அதன் விழுதை தலையில் தேய்க்கலாம். இதை தலையில் மசாஜ் செய்வது போன்று நன்றாக தேய்த்து விட்டு, அதன் பின்னர் 20 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இவ்வாறு செய்தாலும் பொடுகு தொல்லை நீங்கும் எனக் கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி சித்த மருந்தகத்தில் பொடுதலை தைலத்தை வாங்கி அதனை தொடர்ந்து தேய்த்து வந்தாலும், பொடுகு தொல்லை சரியாகும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“