/indian-express-tamil/media/media_files/2025/03/05/daV1hNDuzF3C5YPJu1dV.jpg)
இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் பலர் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் தூக்கமின்மை என பல காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இத்தனை காரணங்கள் கூறப்பட்டாலும் முடி உதிர்வு பிரச்சனைக்கு கூடுமானவரை உடனடியாக தீர்வு காண்பது அவசியம். ஏனெனில், உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அதற்கு அறிகுறியாக முடி உதிர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன்படி, முடி உதிர்வை கட்டுப்படுத்துவதற்கு ஷம்பு, ஹேர் சீரம் போன்ற பொருட்கள் கடைகளில் விற்பனை ஆகிறது. ஆனால், இவற்றில் சேர்க்கப்படும் இரசாயனங்களால் சில நேரங்களில் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். இதனை தடுப்பதற்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் ஹேர்பேக் தயாரித்து விடலாம்.
இதற்காக கற்றாழையின் உள்ளே இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து கழுவிக் கொள்ளலாம். பின்னர், இதனை மிக்ஸியில் போட்டு அத்துடன் இரண்டு முட்டை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கேஸ்டர் ஆயில் ஆகியவை சேர்த்து அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமக்கு தேவையான ஹேர்பேக் தயாராகி விடும்.
இதனை தலை முடியில் தேய்த்து விட்டு சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களில் முடியின் வளர்ச்சியை தூண்டக் கூடிய அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன. இவை நம் முடியின் வளர்ச்சியை 5 மடங்கு அதிகரிக்கும்.
மேலும், இது போன்று வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர்பேக்குகளில் இரசாயனங்கள் சேர்க்கப்படாததால் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பும் கிடையாது.
நன்றி - Be Happy Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.