தேங்காய், வெந்தயம் இருந்தால் போதும்; உங்கள் முடி வளர்ச்சியை அடர்த்தியாக்க முடியும்: இப்படி யூஸ் பண்ணுங்க

தேங்காய், வெந்தயம், பாசிபயிறு போன்று வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சூப்பரான ஹேர்பேக்கை எப்படி தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

தேங்காய், வெந்தயம், பாசிபயிறு போன்று வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு சூப்பரான ஹேர்பேக்கை எப்படி தயாரிக்கலாம் என்று இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது நம் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

author-image
WebDesk
New Update
Coconut hair pack

முடி உதிர்வு பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் வயதானவர்களை விட இளம் பருவத்தினர் தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

Advertisment

இதற்காக கடைகளில் கிடைக்கும் ஷம்பூ, சீரம் போன்ற ஏராளமான பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும், இந்தப் பொருட்களில் இரசாயனங்கள் இருப்பதால், அவை ஒவ்வாமையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. இதை தடுப்பதற்கு வீட்டிலேயே இயற்கையான ஹேர்பேக்கை தயார் செய்யலாம்.

அதன்படி, பச்சை பாசிபயிறை இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன், 4 ஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பசை பதத்திற்கு ஒரு ஹேர்மாஸ்க் கிடைக்கும். இதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

இனி, தேங்காயை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சாதம் வடித்த தண்ணீரை சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதில் இருந்து தேங்காய் பாலை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

இப்போது, முதலில் தயாரித்து வைத்திருந்த ஹேர்மாஸ்குடன் சேர்த்து தேங்காய் பாலை கலக்க வேண்டும். இப்படி செய்தால் நமக்கு தேவையான இரசாயனம் கலக்காத ஹேர்பேக் ரெடியாகி விடும். இந்த ஹேர் பேக்கை தலையில் தேய்த்த பின்னர், சுமார் 30 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். 

வாரத்திற்கு இரண்டு முறை என இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக இதனை செய்தால் முடி அடர்த்தியாக வளரும். மேலும், முடி உதிர்வு பிரச்சனையும் குறையத் தொடங்கும்.

நன்றி - Be Happy Tamil Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Hair Care routine for long and thick hair

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: