50 கிராம் சின்ன வெங்காயத்தை தோல் உறித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். ஆமணக்கு எண்ணெய் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
இவற்றை சேர்த்து கலக்கிய பின்னர், இதனை அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும். அதன் பின்னர், இதை நன்றாக ஆற வைக்க வேண்டும். தற்போது ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி, அதில் 5 ஸ்பூன் ஆலி விதைகள் சேர்க்க வேண்டும். இதை மூன்று நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். அதன் பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இந்த நீருடன் முதலில் அரைத்த கலவையை சேர்த்து கலக்க வேண்டும். இதை தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இவ்வாறு செய்தால் முடி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“