/indian-express-tamil/media/media_files/2025/10/09/download-2025-10-09t-2025-10-09-12-08-47.jpg)
தலைமுடி உதிர்வுக்கு ஏராளமான காரணங்கள் இருக்கக்கூடும். உணவு பழக்கம், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், மருந்துகளின் பின்விளைவுகள், மூலிகை பற்றாக்குறை, அலோபேசியா போன்ற வியாதிகள் என காரணங்கள் நிறையவே. இந்த அனைத்து காரணங்களையும் தாண்டி, மூன்று இயற்கை மூலிகைகள் ஒன்றிணைந்து தலைமுடிக்கு முழுமையான ஊட்டச்சத்தையும் பாதுகாப்பையும் தரும் என்பதே நிபுணர்கள் வலியுறுத்தும் முக்கிய செய்தி.
புதிய ஹேர் பேக் பயன்கள்:
வெந்தயம் + முருங்கை இலை + கற்றாழை, இந்த மூன்றையும் சேர்த்து தயாரிக்கும் ஹேர் பேக், வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், முடி உதிர்வு குறையும், புதிய முடி வளர்ச்சி ஊக்கமடையும், மற்றும் தலைமுடி தழும்புகள் நிரப்பப்படலாம் என நம்பப்படுகிறது.
தேவையான பொருட்கள்:
- வெந்தயம் – 2 ஸ்பூன்
- முருங்கை இலை – 2 கப் (நிழலில் உலர்த்தியது)
- கற்றாழை மடல்கள் – 1 கப் (துண்டுகளாக வெட்டியது)
செய்முறை:
- ஒரு கப் தண்ணீரில் வெந்தயத்தை இரவு முழுக்க ஊறவைக்கவும்.
- முருங்கை இலைகளை நிழலில் இரண்டு நாட்கள் உலர்த்தி வைத்துக்கொள்ளவும்.
- கற்றாழையை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- மிக்ஸியில் மூன்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஈரப்பதம் போதுமானதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
மூலிகைகளின் மருத்துவ பயன்கள்:
மூலிகைகளின் மருத்துவ பண்புகள் தலைமுடி பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வெந்தயம் உடல் சூட்டினை குறைக்கும் தன்மையைக் கொண்டதுடன், முடி உதிர்வை கட்டுப்படுத்தும் சக்தியும் உள்ளது. இதில் உள்ள ஃப்ளவனாய்டுகள் மற்றும் சபோனின்கள் போன்ற பசுமருந்துக் கலவைகள் தலைமுடியில் ஏற்படும் பொடுகு மற்றும் தொற்று பிரச்சனைகளை குறைக்கும். மேலும், முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. முருங்கை இலை இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் எ, சி ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இது முடி வேர்களை சுறுசுறுப்பாக்கி, புதிய வளர்ச்சிக்கு தூண்டுகோலாக செயல்படுகிறது.
மேலும், இதில் உள்ள துத்தநாகம் செபாசியஸ் சுரப்பிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, வறட்சி காரணமாக ஏற்பட்ட அடைப்புகளை அகற்றி முடி வேர்களின் செயல்பாட்டை சீராக்குகிறது. கற்றாழை வறண்ட தலையை ஈரமாக்குவதுடன், வைட்டமின் ஈ, எ மற்றும் சி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கி முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. மேலும், அரிப்பு, பொடுகு போன்ற பிரச்சனைகளை நீக்கி தலைமுடிக்கு தேவையான ஈரப்பதத்தையும் பாதுகாப்பையும் வழங்குகிறது. இந்த மூலிகைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து தலைமுடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்குப் பெரும் பங்காற்றுகின்றன.
முடிவாக...
இந்த மூன்று இயற்கை மூலிகைகள் தனித்தனியாகவே முடி வளர்ச்சிக்கு உதவுவதால், இவை ஒன்றிணைந்து உருவாக்கும் ஹேர் பேக் தலைமுடிக்கு ஒரு முழுமையான தீர்வாக விளங்குகிறது. வேதியியல் பொருட்கள் இல்லாத இயற்கை பராமரிப்பு விரும்பும் அனைவருக்கும், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கக்கூடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.