Advertisment

முடிக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதால் பொடுகு வருமா? அலியா பட் ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறுவது என்ன?

முடிக்கு எண்ணெய் தடவுவது தொடர்பான கட்டுக்கதைகளை அகற்ற சிகையலங்கார நிபுணர் பிரியங்கா போர்க்கரிடம் கேட்டோம்.

author-image
WebDesk
New Update
Hair oiling Myths

Celebrity’s hair stylist Priyanka Borkar busts hair oiling myths

முடிக்கு எண்ணெய் தடவுவது, பழமையான முடி பராமரிப்பு நடைமுறைகளில் ஒன்றாக இருந்தாலும், குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து பல கேள்விகளை எழுப்புகிறது. முகப்பரு வருமா? கலரிங் முடிக்கு இது மோசமானதா? பொடுகு வருமா?

Advertisment

அனைத்து சந்தேகங்களையும் போக்கவும், முடிக்கு எண்ணெய் தடவுவது தொடர்பான கட்டுக்கதைகளை அகற்றவும், அலியா பட், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், கரீனா கபூர் கான் மற்றும் ஷர்வரி வாக் போன்ற நட்சத்திரங்களின் சிகையலங்கார நிபுணர் பிரியங்கா போர்க்கரிடம் கேட்டோம்.

கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது பற்றிய பொதுவான கட்டுக்கதைகளை குறித்து அவர் கூறியது இதுதான்:

கெமிக்கலி டிரிட்டட் முடிக்கு எண்ணெய் தடவ முடியாது?

பல ஸ்டைலிஸ்ட் உங்கள் தலைமுடியை ரசாயன சிகிச்சை செய்த பிறகு அல்லது ஸ்ட்ரெயிட்னிங் செய்த உடனேயே எண்ணெய் தடவ பரிந்துரைக்க மாட்டார்கள். உண்மை என்னவென்றால், நீங்கள் முதல் வாரத்திற்கு எண்ணெய் வைக்கக்கூடாது. உங்கள் சிகிச்சையின் முதல் வாரத்துக்கு பிறகு உங்கள் உச்சந்தலையில் தொடர்ந்து எண்ணெய் வைக்கலாம்.

உங்கள் உச்சந்தலையில் அறை வெப்பநிலை எண்ணெயைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறேன். தேங்காய் அடிப்படையிலான எண்ணெய் சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும், ஏனெனில் இது முடியின் தண்டுக்குள் எளிதில் ஊடுருவி, ஈரப்பதத்தை முடியில் ஊடுருவ அனுமதிக்காது. நீண்ட நேரம் ஸ்ட்ரெயிட்னிங் தோற்றத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

இரவு முழுவதும் உங்கள் தலைமுடியில் எண்ணெய் வைத்திருப்பது அவசியமா?

இல்லை, இது உண்மையல்ல. உண்மையில், நீங்கள் இரவு முழுவதும் எண்ணெயை வைத்திருந்தால், உங்கள் தலைமுடியில் தூசி துகள்கள் சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன, இது மயிர்க்கால்களைத் தடுக்கலாம் மற்றும் உச்சந்தலையில் தொற்று ஏற்படலாம். உங்கள் தலைமுடியில் எண்ணெய் வேலைச் செய்ய, 30 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.

எண்ணெய் தடவுவதால் பொடுகு வருமா?

உலர்ந்த செதிலான உச்சந்தலையில்’ தேங்காய் அடிப்படையிலான முடி எண்ணெயைப் பயன்படுத்துவது, பொடுகை குறைத்து உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவும். ஏனெனில் எண்ணெய் பொடுகை ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வுக்கு காரணமான பூஞ்சை மற்றும் பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது. ஆனால் உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் பசை இருந்து’ அதனால் பொடுகு இருந்தால், அதைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை.

முடிக்கு எண்ணெய் தடவுவது சரும துளைகளை அடைக்குமா?

ஒருவருக்கு ஏற்கனவே எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை இருந்தால், அதிக எண்ணெய் சேர்ப்பது சிறந்த யோசனையாக இருக்காது.

உங்கள் தலைமுடியில் 30 நிமிடங்களுக்கு மேல் எண்ணெய் வைப்பது, அல்லது நாம் குழந்தைகளாக இருந்தபோது சில நாட்களுக்கு அப்படியே வைத்திருப்பதை போல செய்தால், தூசி மற்றும் மாசுகளை உங்கள் கூந்தல் ஈர்க்கும்.

தேங்காய் அடிப்படையிலான முடி எண்ணெயைப் பயன்படுத்துவது, அது ஆழமாக ஊடுருவி, முடியை உள்ளே இருந்து சரிசெய்ய உதவுகிறது.

உண்மை என்னவென்றால், உங்கள் உச்சந்தலையில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது உங்கள் தலைமுடிக்கு ஈரப்பதத்தையும் பிரகாசத்தையும் சேர்க்கிறது, மேலும் இது முடி வளர்ச்சியை வலுவூட்டுவதையும் ஊக்குவிக்கிறது. இது ஈரப்பதமான சூழலின் விளைவுகளிலிருந்து பாதுகாப்பதன் மூலம் ஸ்ட்ரெயிட்னிங் தோற்றத்திற்கு நீண்ட ஆயுளை வழங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment