சமீபத்திய ஆண்டுகளில், தோல் மற்றும் முடி பராமரிப்பில் பயோட்டின் (Biotin) மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. ஆனால், அது என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா த்விவேதியின் கூற்றுப்படி, பயோட்டின் அல்லது வைட்டமின் B7 என்பது நாம் உண்ணும் உணவில் இயற்கையாக உள்ள ஒரு முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
Advertisment
கோதுமை, ஓட்ஸ் போன்ற தானியங்கள், காய்கறிகள், கீரை, காளான் போன்றவை மற்றும் அரிசி ஆகியவை பயோட்டின் வளமான ஆதாரங்கள் ஆகும். முடி ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பயோட்டின் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இது எந்த சமச்சீர் உணவிலும் அவசியம் என்று ஷிகா கூறுகிறார்.
முக்கியமாக, நீரில் கரையக்கூடிய வைட்டமின் பி பயோட்டின், சரும பிரகாசத்தை அதிகரிக்கவும், முடியை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவுகிறது. மந்தமான அல்லது சேதமடைந்த முடி உள்ளவர்களுக்கு தினசரி பயன்பாட்டிற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கான உங்கள் தினசரி முடி பராமரிப்பு வழக்கத்தில் பயோட்டினைச் சேர்ப்பதன் பல நன்மைகளைப் பற்றி நிபுணர் இங்கு கூறுகிறார்.
Advertisment
Advertisements
1. முடியை வலுப்படுத்தவும், அடர்த்தியாகவும் மாற்ற இது உதவுகிறது. வலுவான தடிமனான இழைகளை வளர்ப்பது உட்பட முடி ஆரோக்கியத்தில் நன்மை பயக்கும் விளைவுகளுக்கு பயோட்டின் நன்கு அறியப்பட்டதாகும்.
2. பயோட்டின் முடியை வலுப்படுத்துவதால், முடியின் நுனியில் உடையும் வாய்ப்பு குறைவு, அதன் மூலம், முடியின் நீளத்தை மேம்படுத்தி பாதுகாக்கிறது, மேலும் முடி சேதமடையாமல் பாதுகாக்கிறது.
3. பயோட்டின் உட்கொள்வது ஒட்டுமொத்த முடியின் தரத்தை மேம்படுத்தும் என்பதை சுட்டிக்காட்ட போதுமான ஆராய்ச்சி உள்ளது.
4. ஆரோக்கியமான முடி மற்றும் உச்சந்தலையை மேம்படுத்த இது உதவுகிறது. முடி, தோல் மற்றும் நகங்களை உருவாக்கும் அடிப்படை புரதமான கெரட்டின் உள்கட்டமைப்பை, பயோட்டின் அதிகரிக்கிறது. அடர்த்தி மற்றும் உச்சந்தலையில் பாதுகாப்பு உட்பட முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
5. பயோட்டின் முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும். முடி உதிர்தலுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது. முடி உதிர்வை எதிர்த்துப் போராட பயோட்டின் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகப் பயன்படுத்தப்படலாம்.
6. பயோட்டின் முடி இழைகளை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மந்தமான, சேதமடைந்த கூந்தலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் தலைமுடிக்கு பயோட்டின் பயன்படுத்துவதன் மூலம் மிகவும் பயனடைவதற்கு இதுவே காரணம். உங்கள் உணவில் போதுமான அளவு பயோட்டின் எடுத்துக்கொள்வதை உறுதிப்படுத்துவது அவசியம், ஏனெனில் இது உங்கள் முடி உதிர்வதைத் தடுக்க உதவும். பயோட்டின் உங்கள் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க முடியும் - இதுவே ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அவசியம்.
எப்படி பயன்படுத்தலாம்?
பயோட்டின் பொதுவாக ஷாம்பூவில் ஒரு மூலப்பொருளாக, மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படலாம் - அல்லது ஒரு சப்ளிமெண்ட்ஸ் வடிவில் வாய்வழியாக உட்கொள்ளலாம்.
நீங்கள் சப்ளிமெண்ட்ஸ் உட்கொண்டால், சுத்தமான மற்றும் தாவர அடிப்படையிலான பயோட்டின் தேர்வு செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள், ஏனெனில் அவை உடலால் சிறப்பாக உறிஞ்சப்படும். மேலும் நீண்ட கால நுகர்வுக்கு முற்றிலும் பாதுகாப்பானவை.
வைட்டமின் B7 க்கான விதைகள், நட்ஸ், கீரை, ப்ரோக்கோலி மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற சில காய்கறிகள் போன்ற பயோட்டின் அடர்த்தியான உணவுகளையும் உங்கள் உணவில் சேர்க்கலாம்.
பல அழகு பிராண்டுகள் தாவர அடிப்படையிலான செபானியா அகட்டி சாற்றில் (Sebania Agati extract) செய்யப்பட்ட ஷாம்புகள் போன்ற பயோட்டின் தயாரிப்புகளை வழங்குகின்றன, இது இயற்கையான பயோட்டின் ஒரு சக்திவாய்ந்த மூலமாகும், இது மேம்பட்ட அமைப்புடன் வலுவான முடியை ஆதரிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“