உண்மையில், உலர்ந்த மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சருமத்தை எவ்வாறு கவனித்துக்கொள்வீர்களோ, அதேபோன்று உங்கள் உச்சந்தலையிலும் எண்ணெய் தடவ வேண்டும். இது பாதுகாப்பானது. நீரேற்றம் மற்றும் ஆரோக்கியமான முடியை பராமரிக்க உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது பரிந்துரைக்கப்படுகிறது.
அந்தவகையில், வேப்ப எண்ணெய் முடி பராமரிப்புக்கு மிகவும் நல்லது. இது அனைத்தையும் குணப்படுத்தும் மூலிகை அமுதமாக கருதப்படுகிறது. உங்கள் உச்சந்தலையில் உள்ள பல நிலைகளை இது கவனித்துக் கொள்ளும் . நீங்கள் ஏன் வேப்ப எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
பலன்கள்
வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடிக்கு, பின்வரும் நன்மைகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது:
* இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
* நரை முடியின் வளர்ச்சியைக் குறைக்கிறது
* இது உதிர்ந்த முடியை ஆற்றும்
* இது உச்சந்தலையை சீராக்குகிறது
* பொடுகை வெகுவாகக் குறைக்கிறது
* இது பேன்களை எதிர்த்துப் போராடுகிறது
வேப்ப எண்ணெய் கொழுப்பு அமிலங்கள், சில ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஈ, கால்சியம் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் போன்றவற்றுடன் நிரம்பியுள்ளது, இது உங்கள் முடியின் தரத்தை மேம்படுத்தும்.
எப்படி அப்ளை செய்வது?

எண்ணெயை நேரடியாக உச்சந்தலையில் தடவும் முன், முதலில் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தூய வேப்ப எண்ணெய் உடன் ஜோஜோபா, ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலக்கவும். எண்ணெயைத் தடவி, குறைந்தது 60 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு லேசான ஷாம்பூவுடன் உங்கள் தலைமுடியை கழுவவம்.
குறிப்பு
உங்கள் உச்சந்தலை இயற்கையாகவே எண்ணெய் பசை இருந்தால்’ முடிக்கு மட்டுமே எண்ணெய் தடவவும், உச்சந்தலையைத் தவிர்க்கவும். இந்த வழியில் உங்கள் தலைமுடி மென்மையாகவும், உச்சந்தலையில் பிசுபிசுப்பு இல்லாமல் ஈரப்பதமாகவும் இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“