வெங்காயச் சாறு, பல ஆண்டுகளாக முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வீட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வெங்காயச் சாற்றில் உள்ள அழகுக் கனிமமான சல்ஃபர்’ தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்று அறிவியல் நிரூபித்துள்ளது. மேலும் வெங்காய சாறு’ வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.
மும்பையைச் சேர்ந்த தோல் மருத்துவர் பல்லவி சுலே, எளிதில் கிடைக்கும் இந்த வீட்டு வைத்தியத்தின் நன்மைகள் மற்றும் விரைவான பயன்பாடுகளை விளக்கினார்.
“வெங்காய சாறு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. வெங்காயச் சாற்றை முடி மற்றும் உச்சந்தலையில் தடவுவது மயிர்க்கால்களுக்கு இரத்த விநியோகத்தை அதிகரிக்கும், இது முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது. வெங்காயச் சாறு முடி முன்கூட்டிய நரைப்பதைத் தாமதப்படுத்தும். இது மயிர்க்கால்களில் கேடலேஸ் என்ற நொதியின் உற்பத்திக்குக் காரணம்."
கிரீம்கள், முடி எண்ணெய்கள், ஷாம்பு என வெங்காய சாறுக்கு சந்தையில்’ நிறைய காம்பினேஷன்ஸ் உள்ளன.. ஆனால் மருந்துகளின் செயல்திறனை மருத்துவ பரிசோதனைகள் மூலம் மட்டுமே தீர்மானிக்க முடியும். எனவே ஒருவர் கவனமாக தயாரிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனினும் புதிய வெங்காய சாற்றைப் பயன்படுத்துவது சிறந்தது.
வெங்காய சாறு தயாரிப்பது எப்படி
வெங்காயத்தை நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். ஒரு மஸ்லின் துணி மூலம் வடிகட்டி’ சுத்தமான உலர்ந்த கண்டெய்னரில் சேமித்து ஃபிரிட்ஜில் வைக்கவும்.
மனதில் கொள்ள வேண்டிய குறிப்புகள்
*வெங்காயத்தால் அலர்ஜி உள்ளவர்கள்’ வெங்காயச் சாற்றை உச்சந்தலையில் தடவ வேண்டாம்.
*வெங்காயச் சாறு உச்சந்தலையில் எரிச்சலை ஏற்படுத்தும், எனவே கற்றாழை/ தேங்காய் எண்ணெய் / தேன் போன்ற ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்வது நல்லது.
*வெங்காய சாறு’ பயன்படுத்திய பிறகு உச்சந்தலையில் சென்சிட்டிவிட்டி அதிகரிக்கலாம். அப்படி அறிகுறிகள் தெரிந்தால், உங்கள் தோல் மருத்துவரை அணுகவும். இது வெங்காய சாறு மற்றும் மருந்துகளுக்கு இடையேயான எதிர்வினைகளாகவும் இருக்கலாம், எடுத்துக்காட்டாக, ஆஸ்பிரின் போன்றவை.
*வெங்காய சாற்றின் வாசனை மிகவும் கடுமையானது. எனவே, வாசனையை மறைப்பதற்கும், வெங்காயச் சாறுக்கு மதிப்பு சேர்க்க, அத்தியாவசிய எண்ணெய்களின் சில துளிகள் கலந்து கொள்ளலாம். உதாரணமாக டீ ட்ரீ ஆயில் அல்லது லெவண்டர் ஆயில் போன்றவை.
சமையலறை வைத்தியம்
ஆனியன் ஹேர் மாஸ்க்:
இரண்டு டீஸ்பூன் வெங்காய சாற்றுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலக்கவும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் இந்த மாஸ்கை பயன்படுத்தலாம்.
இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி தண்டுகளுக்கு பிரகாசத்தையும் சேர்க்கிறது. பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறது, மேலும் உச்சந்தலையில் ஏதேனும் தொற்றுநோய் இருந்தால் அதையும் நீக்குகிறது..
வெங்காயச் சாறு, கேஸ்டர் ஆயில்!
ஒவ்வொன்றையும் சம அளவு கலந்து, குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உச்சந்தலையில் தடவவும். இது ஒரு சிறந்த கலவையாகும், ஏனெனில் இரண்டு பொருட்களும் முடி மீண்டும் வளர உதவுகின்றன மற்றும் ஒரே மாதிரியான அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “