Advertisment

நெல்லிக்காய்-வெள்ளரி ஜூஸ் முடி வளர்ச்சிக்கு உதவுமா? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

நெல்லி மற்றும் வெள்ளரி சாறு உண்மையில் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு சாத்தியமான நன்மைகளை அளிக்கும்.

author-image
WebDesk
New Update
Hair health

Amla cucumber juice for hair growth

பளபளப்பான கூந்தல் முதல் அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தல் வரை உங்கள் தலைமுடி தேவைகளை பூர்த்தி செய்ய உறுதியளிக்கும் ஏராளமான ஹேர்கேர் ஹேக்ஸ் உள்ளன. அப்படி முடி வளர்ச்சிக்கான ஒரு தீர்வைக் கண்டதும், அது உண்மையில் செயல்படுகிறதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க விரும்பினோம்.

Advertisment

அம்மா, மகளான மெஹ்ரோஸ்-புஷ்ரா இன்ஸ்டாகிராமில், அம்லா-வெள்ளரிக்காய் சாறு அடர்த்தியான மற்றும் நீண்ட முடி வளர்ச்சிக்கு உதவும் என்று பகிர்ந்துள்ளனர்.

தேவையான பொருட்கள்

வெள்ளரி- 1

நெல்லிக்காய்- 1

கறிவேப்பிலை- 3,4 இலை

இஞ்சி- சிறிய துண்டு

கருப்பு உப்பு- 1/2 டீஸ்பூன்

தண்ணீர- 1 கப்

தேன் – தேவைக்கேற்ப

எப்படி செய்வது?

நெல்லிக்காயையும் வெள்ளரியையும் கழுவவும். அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் தண்ணீருடன் ஒரு பிளெண்டரில் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி அப்படியே குடிக்கவும்.

சுவைக்கு சிறிது கருப்பு உப்பு மற்றும் தேன் சேர்க்கலாம்.

எஞ்சிய கூழ் உங்கள் தலைமுடியில் ஒரு ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம், அதை சுமார் 15-20 நிமிடங்கள் வைத்திருந்து சாதாரண நீரில் கழுவவும். இது பட்டுப்போன்ற மற்றும் பளபளப்பான முடியைப் பெற உதவும் என்று  வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உண்மையில் உதவுமா?

நெல்லி மற்றும் வெள்ளரி சாறு உண்மையில் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு சாத்தியமான நன்மைகளை அளிக்கும்.

டாக்டர் ரிங்கி கபூர் (consultant dermatologist, cosmetic dermatologist, and dermato-surgeon, The Esthetic Clinics) கருத்துப்படி, இந்த ஜூஸ் வைட்டமின் சி நிறைந்தது. கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நெல்லிக்காய், வைட்டமின் சி-யின் ஆற்றல் மையமாகும். கொலாஜன், முடி வலிமை மற்றும் அமைப்புக்கு அவசியம்.

நெல்லிக்காய் மற்றும் வெள்ளரி இரண்டிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் ஹேர் ஃபாலிக்கிள்ஸை பாதுகாக்க உதவுகின்றன.

வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது, இது உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலை ஈரப்பதத்துடன் இருக்க உதவுகிறது. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு சரியான நீரேற்றம் முக்கியமானது.

Amla

இந்த ஜூஸ், உங்கள் ஹேர் ஃபாலிக்கிள்ஸ் சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவக்கூடும், இதனால் அவை வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெறுவதை உறுதிசெய்கின்றன.

நெல்லி, வெள்ளரிக்காய் உச்சந்தலையில் குளிர்ச்சி மற்றும் இனிமையான விளைவைக் கொண்டிருக்கின்றன, எரிச்சல் மற்றும் பொடுகு ஆகியவற்றைக் குறைக்கும்.

கறிவேப்பிலையில் பாரம்பரியமாக முடி உதிர்தல் மற்றும் முடி அமைப்பை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இஞ்சி அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறனுக்காக அறியப்படுகிறது, இது மறைமுகமாக ஹேர் ஃபாலிக்கிள்ஸை ஊட்டச்சத்துக்களுடன் ஆதரிக்கிறது.

தேன், முடிக்கு நன்மை பயக்கும், இதன் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படும், என்று டாக்டர் நவ்யா ஹண்டா (dermatologist, cosmetologist, and laser surgeon, Primus Super Speciality Hospital) கூறினார்.

ஆரோக்கியமான கூந்தல் என்பது மரபியல், ஒட்டுமொத்த உணவுமுறை மற்றும் முடி பராமரிப்பு நடைமுறைகள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவு, சரியான முடி பராமரிப்பு, அதிக ஹீட்டிங் அல்லது ரசாயன சிகிச்சையைத் தவிர்ப்பது ஆகியவை ஆரோக்கியமான முடியைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் அவசியம்.

உங்கள் தலைமுடியைப் பற்றி உங்களுக்கு குறிப்பிட்ட கவலைகள் இருந்தால், தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு பரிந்துரைக்கிறேன், என்றார் டாக்டர் கபூர்.

Read in English: Can using amla-cucumber juice help with hair growth?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment