Advertisment

முடி கொட்டுதா? வாரத்துக்கு 2 முறை இந்த ஹேர் பால் சீரம் யூஸ் பண்ணுங்க

பியூட்டி பிளாகர் ஷாலினி இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட ஹேர் பால் சீரம் ஹேக்கை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

author-image
WebDesk
New Update
hair fall

Hair care

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பக்கவிளைவுகள் இல்லாத முடி உதிர்வுக்கான பயனுள்ள தீர்வுகளை நாம் எப்போதும் தேடுகிறோம்.

Advertisment

சில நம்பிக்கைக்குரியதாகத் தோன்றினாலும், ஒவ்வொருவரின் உச்சந்தலையும் இதற்கு எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பது வேறுபட்டதாக இருக்கலாம். அதனால்தான், வழிகாட்டுதலைத் தேடுவது மிக முக்கியமானது.

பியூட்டி பிளாகர் ஷாலினி இயற்கையான பொருட்களால் செய்யப்பட்ட ஹேர் பால் சீரம் ஹேக்கை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

சீரம் தயாரிப்பது எப்படி                         

தேவையான பொருட்கள்

1 டீஸ்பூன் - வெந்தயம், ஊறவைத்தது

1 டீஸ்பூன் - அரிசி, ஊறவைத்தது

1 துளிர் - கறிவேப்பிலை

வெங்காயத் தோல்- சிறிதளவு

செய்முறை

*வெந்தயம் மற்றும் அரிசியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.

*மறுநாள் காலையில் இதில் வெங்காயத்தோல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.

*கலவையை ஆறவைத்து வடிகட்டவும். இதை ஒரு ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றவும்.

எப்படி பயன்படுத்துவது?

*இதை ஒரு வாரம் சேமித்து வாரத்திற்கு 2 முதல் 3 முறை பயன்படுத்தவும் அல்லது இரவு முழுவதும் அல்லது ஹேர்வாஷ் செய்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன் வைக்கவும்.

* லேசான ஷாம்பு கொண்டு கழுவவும்.

இந்த ஹேக் உண்மையில் வேலை செய்யுமா?

வீட்டு முடி பராமரிப்பு மருந்துகளை விரும்புபவர்களுக்கு, வெந்தயம், வெங்காயத் தோல் மற்றும் அரிசி ஆகியவற்றின் கலவையானது ஒரு சிறந்த மற்றும் பயனுள்ள விருப்பமாக செயல்படுகிறது என்று டாக்டர் சவுரப் ஷா (dermatologist, cosmetologist, dermatosurgeon and hair transplant surgeon, Bhatia Hospital Mumbai) கூறினார்.

வெந்தய விதைகளில் ட்ரைகோலினைன் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆல்கலாய்டுகள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு, வலி ​​நிவாரணி மற்றும் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது ஈஸ்ட்ரோஜன் எஸ்ட்ராடியோலின் அளவை அதிகரிக்கிறது, இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது, என்று டாக்டர் ஷா கூறினார்.

வெந்தயம் உங்கள் தலைமுடியின் கதையை மாற்றும், அது உச்சந்தலையை ஹைட்ரேட் செய்கிறது என்று டாக்டர் ஜதின் மிட்டல் (cosmetologist, skin expert, and co-founder Abhivrit Aesthetics, New Delhi) கூறுகிறார்.

பல ஆய்வுகளின்படி, இது முடியை அடர்த்தியாக்கவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு குணங்கள் நிறைந்தது, இது பாதிக்கப்பட்ட முடியை புத்துயிர் பெற உதவுகிறது.

வெங்காயத்தில் அதிக அளவு சல்பர் உள்ளது. அவை முடியின் கொலாஜன் உள்ளடக்கத்தை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது, இதனால் அதிக திக்னெஸ் மற்றும் முடி வேர் வலிமையை அளிக்கிறது. வெங்காயம் உச்சந்தலையில் ஈரப்பதம் மற்றும் பொடுகு குறைப்பதன் மூலம் உச்சந்தலையில் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.

வெங்காயச் சாற்றின் பயன்பாடு உச்சந்தலையில் pH ஐ பராமரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ROS (Reactive Oxygen Species) தலைமுடியில் ஏற்படும் தீய விளைவுகளை எதிர்த்து, முடி வளர்ச்சியைத் தூண்டி, முடியின் அளவை அதிகரிக்கும்.

அரிசி தண்ணீர் முடி வேர்களை வலுப்படுத்த அறியப்படுகிறது. கூடுதலாக, அரிசி முடி தண்டுகளுக்கு பளபளப்பை சேர்க்கிறது மற்றும் முடி உடைவதைத் தடுக்கிறது, என்று டாக்டர் ஷா கூறினார்.

வானிலை, மாசுபாடு போன்ற வெளிப்புற தாக்கங்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றாலும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் முடி உதிர்தலைக் குறைக்கவும் நாம் நிச்சயமாக நம் கூந்தலை கவனித்துக் கொள்ளலாம்.

முழு விளைவுகளையும் பெற இந்த இயற்கையான ஹேர்ஃபால் சீரம் வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.  ஆனால் பிரச்சனை தொடர்ந்தால், ஒரு சுகாதார நிபுணரை பார்க்க நான் நிச்சயமாக உங்களுக்கு அறிவுறுத்துகிறேன், என்று டாக்டர் மிட்டல் கூறினார்.

Read in English: Are natural ingredients like fenugreek seeds, onion peel and rice good for hairfall?

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment