ஆயுர்வேதத்தில், திரிதோஷங்களை- வாதம், பித்தம் மற்றும் கபம் - சமநிலைப்படுத்துவது ஒரு தனிநபருக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை வல்லுநர்கள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர்.
அதிலும் நெல்லிக்காய், நெய் மற்றும் கற்கண்டு ஆகியவற்றின் கலவையானது ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது, குறிப்பாக வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது.
ஆனால் இந்த பழமையான வைத்தியம் முடி உதிர்வை நிவர்த்தி செய்வதில் ஏன் பிரபலமானது?
டாக்டர் கிருதி சோனி, ஆயுர்வேத நூல்களில் நெல்லிக்காய் ஒரு தெய்வீகப் பழம் 'தாத்ரி' என்று போற்றப்படுகிறது என்று குறிப்பிட்டார். இது வைட்டமின் சி-யின் சக்திவாய்ந்த மூலமாகும் மற்றும் பித்த தோஷத்திற்கான இயற்கையான அமைதிப்படுத்தியாகும்.
பித்தம் அதிகமாக இருந்தால், அது முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே நரைக்க வழிவகுக்கும். ஆம்லா, அதன் ஊட்டமளிக்கும் பண்புகளுடன், ஹேர் ஃபாலிக்கிள்ஸ்க்கு புத்துயிர் அளிக்கிறது, வளர்ச்சி மற்றும் உயிர்ச்சக்தியை ஊக்குவிக்கிறது.
நெய் என்பது ஏழு தாதுக்களை (உடல் திசுக்கள்) வளர்க்கும் இயற்கையான ரசாயனம் ஆகும். அதன் ஆழமான ஊடுருவும் குணங்கள், நெல்லிக்காயின் நன்மை நம் முடியின் வேர்களை அடைவதை உறுதி செய்கிறது, என்று டாக்டர் சோனி கூறினார்.
கற்கண்டு எப்போதும் அதன் குளிர்ச்சியான பண்புகளால் பலரைக் கவர்ந்துள்ளது. இது வாதம் மற்றும் பித்த தோஷங்கள் இரண்டையும் சமப்படுத்துகிறது, உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை எதிர்க்கிறது, இது பெரும்பாலும் முடி பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம்.
இந்த மூன்று பொருட்களும் ஒன்றாகச் சேர்ந்தால், அவை ஒரு ’Tridoshic’ டானிக்கை உருவாக்குகின்றன, உடலின் ஆற்றல்களை ஒத்திசைக்கிறது, இதை வெறும் வயிற்றில் உட்கொள்வதால், அதன் சாராம்சம் முழுமையாக உறிஞ்சப்பட்டு, முடிக்கு நேரடியாக பயனளிக்கும்.
இதை எப்படி செய்வது?
ஒரு கிண்ணத்தில், 1/2 டீஸ்பூன் நெய், நெல்லிக்காய் பொடி மற்றும் கற்கண்டு சேர்த்து அனைத்தையும் கலக்கவும்.
இதை காலை வெறும் வயிற்றில் நல்ல மென்று சாப்பிடுங்கள்.
ஆயுர்வேதத்தில் முடிக்கு மிக முக்கியமான ஆம்லா, பாலுணர்வூட்டும் மற்றும் இயற்கையில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. புளிப்புச் சுவையால் வாததோஷத்தைச் சமன் செய்கிறது. இனிப்பு சுவையும் குளிர்ச்சியான தன்மையும் பித்த தோஷத்தை சமநிலைப்படுத்துகிறது.
மேலும் இது உடலில் உள்ள கப தோஷத்தை சமன் செய்கிறது. எனவே இது உடலில் உள்ள மூன்று தோஷங்களையும் சமன் செய்கிறது, என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், எனது நோயாளிகளுக்கு நான் அடிக்கடி சொல்வது போல், முடி ஆரோக்கியம் என்பது நமது உள் சமநிலையின் பிரதிபலிப்பாகும். ஆம்லா-நெய்-கற்கண்டு கலவையானது ஆற்றல் வாய்ந்ததாக இருந்தாலும், சீரான உணவு, சரியான தூக்கம் மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று டாக்டர் சோனி வலியுறுத்தினார்.
Read in English: Amla, ghee, mishri: Is this a ‘potent Ayurvedic mix’ to tackle hair fall?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“