/indian-express-tamil/media/media_files/2025/07/21/hairfall-remedy-rice-water-2025-07-21-11-57-03.jpg)
Hairfall remedy Rice water Dr Anandhi
நிறைய பேருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை, முடி உதிர்தல். அதிலும் குறிப்பாகப் பெண்களுக்கு இது ஒரு பெரும் கவலையை ஏற்படுத்தும். நடிகை ஆனந்திக்கும்கூட இந்தப் பிரச்சனை இருந்திருக்கிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார் என்று அவரே பகிர்ந்து கொள்கிறார்.
"ஆரம்பத்துல எனக்கு ரொம்ப முடி கொட்ட ஆரம்பிச்சது. அப்புறம் கர்ப்பமா இருந்த சமயத்துல இன்னும் நிறையவே கொட்ட ஆரம்பிச்சுடுச்சு. அப்போ எங்க அம்மா எனக்கு ஒரு யோசனை சொன்னாங்க. நான் கர்ப்ப காலத்துல இருந்தபோது, நம்ம சாதம் வடிக்கிற கஞ்சி தண்ணி இருக்குல்ல? அதாவது சாதாரண வெள்ளை அரிசியை ஊற வச்சு, குக்கர்ல சமைக்காம, அந்தக் காலத்துல கஞ்சி வடிச்சு சமைப்பாங்களே, அந்த மாதிரி சமைச்சு, கஞ்சி தண்ணியை வடிச்சு எடுத்து வச்சுக்கணும். அதை நீங்க ஃபிரிட்ஜில் வச்சுக்கலாம் இல்ல வேற எதுல வேணும்னாலும் வச்சுக்கலாம். அது கொஞ்சம் புளிக்கணும் (ferment ஆகணும்). அப்படிப் புளிச்ச தண்ணியை எடுத்து நான் தலைக்கு யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். நிஜமாவே எனக்கு ரொம்ப நல்ல ரிசல்ட் கிடைச்சுது. எனக்கு முடி உதிர்தல் ரொம்பவே குறைஞ்சு போச்சு!" என்கிறார் ஆனந்தி.
அப்போ இதுதான் ஆனந்தியின் கூந்தல் அழகு ரகசியமா?
ஆனந்தி பகிர்ந்த இந்த ரகசியம், நம் முன்னோர்கள் காலம்காலமாகப் பயன்படுத்தி வந்த ஒரு இயற்கையான முறை. அரிசி கஞ்சி நீர் (Rice Water) கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது என்பது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது சத்துக்கள் கூந்தல் வேர்களை வலுப்படுத்தி, முடி உதிர்வதைக் குறைத்து, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
நீங்களும் முடி உதிர்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? நடிகை ஆனந்தி கூறிய இந்த எளிய, அதே சமயம் சக்தி வாய்ந்த அரிசி கஞ்சி நீரைப் பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.