ஹம்பியை பார்க்க மறந்துறாதீங்க ; அவ்வளவு அற்புதமான இடம்!!!

அதிகப்படியாக கூகுளில் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுள் முதலாவதாக ஹம்பி உள்ளது .

By: July 11, 2019, 3:14:15 PM

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் தான் ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமாக ஹம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. விசயநகரத்துக்கும் முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி அதிகப்படியாக கூகுளில் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுள் முதலாவதாக ஹம்பி உள்ளது . விசய நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுதி என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஹம்பி, பெங்களூருவிலிருந்து 353 கிமீ தொலைவிலும், பெல்லாரியிலிருந்து 74 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகிலுள்ள இரயில்நிலையம் 13 கிமீ தொலைவிலுள்ள ஹோஸ்பேட் இரயில் நிலையமாகும். ஆந்திரப்பிரதேசத்திலுள்ள குண்டக்கல் இரயில்நிலையம் இங்கிருந்து 150 கிமீ தொலைவிலுள்ளது.

ஹம்பி -யை பார்வையிட ஏற்ற நேரம்

செப்டம்பர் முதல் மார்ச் வரை, ஹம்பி பார்வையிட ஏற்ற இடம். வானிலை இதமாகவும் குளிராகவும் இக்கால பகுதியில் இருக்கும். இச்சமயம் பல திருவிழாக் கொண்டாட்டங்களும் ஹம்பியில் நடத்தப்படுகின்றன.

ஹம்பி -யை பார்வையிட எப்படி செல்வது

சுற்றுலாத்தலமான ஹம்பிக்கு விமான மார்க்கமாகவோ அல்லது ரயில் மூலமாக அல்லது சாலைப்போக்குவரத்து மூலமாக செல்லலாம்.

விமானம் மூலமாக: ஹம்பிக்கு அருகிலுள்ள விமான நிலையமாக பெல்லாரி விமான நிலையம் அமைந்துள்ளது. ஹம்பியிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள இது ஒரு உள் நாட்டு விமான நிலையமாகும். இது தவிர 350 கி.மீ தொலைவில் உள்ள பெங்களூர் விமான நிலையம் சர்வதேச விமான சேவைகளை கொண்டுள்ளது.

ரயில் மூலமாக: ஹம்பியிலிருந்து 13 கி.மீ தொலைவில் ஹோஸ்பேட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கியமான நகரங்களுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வாடகை கார் அல்லது வேன்கள் மூலம் ஹம்பியை அடையலாம்.

சாலை மார்க்கமாக: கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது. இந்த பேருந்துகள் குறைவான கட்டணத்துடன் அதே சமயம் சௌகரியமான பிரயாணத்தை அளிக்கின்றன.
பெங்களூரிலிருந்து ஹம்பியை அடைய மூன்று வழிகள் உள்ளன.

பெங்களூர் → சித்ரதுர்கா → ஹோஸ்பெட் → ஹம்பி – இந்த பாதை சுமார் 360 கிலோமீட்டர் தூரம் கொண்டது. சுமார் ஏழரை மணி நேரம் ஆகும்.

சித்ரதுர்கா கோட்டை: சித்திரதுர்க்கா கோட்டை (Chitradurga Fort), சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலைக்கோட்டையாகும். “அழகிய கோட்டை” என்று கன்னடத்தில் சொல்லப்படும். இக்கோட்டை, 17ம் மற்றும் 18 ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இராஷ்டிரகூடர், சாளுக்கியர்கள், போசளப் பேரரசு மற்றும் சித்ரதுர்காவின் நாயக்கர்களால் கட்டப்பட்டது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Hampi karnataka tourist spots

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X