scorecardresearch

புத்தாண்டு விருந்துக்கு பிறகு ஹேங்கோவரா? இது உங்களுக்கான டிப்ஸ்

புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு அடுத்த நாள் ஹேங்கோவரில் தவிப்பவர்கள் அதிலிருந்து விடுபட மருத்துவரின் ஆலோசனைகள் பார்ப்போம்ஃ

புத்தாண்டு விருந்துக்கு பிறகு ஹேங்கோவரா? இது உங்களுக்கான டிப்ஸ்

கொரோனா தொற்று பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், 2020-ம் ஆண்டு பெரும் பரபரப்புடன் தன்னை முடித்துகொண்டது. 2021 ஆம் ஆண்டு இன்று தனது முதல் நாளை தொடங்கியுள்ள நிலையில், இந்த புத்தாண்டை் வரவேற்று அனைவரும் மகிழ்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தில் மது பெரும்பங்கு வகிக்கும். அந்த வகையில் புத்தாண்டு தினத்தில் மது அருந்தி விட்டு, அடுத்த நாள் காலை மதுபோதை தெளிய பலர் படாத பாடுபடுவார்கள.

அப்படி ஹெங்கோவரில் தவிப்பவர்கள் இந்த எளிய வழிகளை பயன்படுத்தினால் ஹேங்கோவரில் இருந்து விடுபடலாம். அந்த வகையில் ஹேங்கோவரில் இருந்து விடுபட உதவி செய்யும் ஐந்து பானங்களை இங்கே பார்க்கலாம். தற்போது ரஷ்மி ராக்கெட் மற்றும் டாப்ஸி பன்னு ஆகியோருக்கு உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊட்டச்சத்து நிபுணர் மம்மும் கரேவால்,உங்களுக்காக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் இஞ்சி

குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் தொந்தரவு உள்ளவர்கள் இந்த பானத்தை குடிக்கலாம். இஞ்சி குமட்டலுக்கு எதிராக தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் நீண்டகால பயன்தரும். பயன்படுத்தப்படுகிறது. தேனில் உள்ள பிரக்டோஸ் உடலில் இருந்து ஆல்கஹால் அகற்றும் வேகத்தை அதிகரிக்கிறது.

தேவையான  பொருட்கள் :

5 மிலி – வடிகட்டாத ஆப்பிள் சைடர் வினிகர்

5 மிலி – எலுமிச்சை சாறு

5 மிலி – இஞ்சி சாறு

1ஸ்பூன் – தேன்

200 மிலி – நீர்

செய்முறை

இந்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலக்கினால் இந்த பானம் தாயராகி விடும்.

வாழைப்பழ மில்க் ஷேக்

ஆல்கஹால் குடிப்பதால், உடலில் நீரிழப்பு, சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளை இழக்க செய்துவிடுகிறது. இதற்கு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் சிறந்த முறையில் தீர்வு காணலாம். வாழைப்பழத்தில், அதிகளவு பொட்டாசியம் உள்ளது. மேலும் பாலில் காணப்படும் கேசீன் புரதம் ஆல்கஹால் எதிர்க்கும் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.

தயாரிப்பு முறை :

தோல் உறித்த வாழைப்பழம் மற்றும் முழு கொழுப்புடன் பால்  தேன் ஆகியவற்றை ஒன்றாக  ஹேண்ட் பிளெண்டரைப் பயன்படுத்தி வாழைப்பழத்தை பாலுடன் கலக்கவும். அதன் மேல் சிறிது தேன் கலந்து கலக்கினால் இந்த பானம் தயாராகிவிடும்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் தண்ணீரில் எலக்ட்ரோலைட் உள்ளது.  இது மதுபானம் அருந்தியதால் வந்த ஹேங்கோவரை மீட்டெடுக்கும் திறனை கொடுக்கும். விளையாட்டு போட்டிகளில் இழந்த சக்தியை மீண்டும் பெற போட்டிக்கு நடுவில் கொடுக்கப்படும் தேங்காய் நீர் இழந்த சக்தியை மீட்டெடுக்கும். என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

தேங்காய் பால்

தேங்காய் பால் மிருதுவானது வயிற்றின் உட்புறத்தில், உள்ள  புண்களை ஆற்றுவதற்கும் உதவும் ஒரு எளிய செய்முறையாகும்,.மேலும் இதில் பொட்டாசியம் மற்றும் சோடியத்தின் முக்கியமான தாதுக்கள் உள்ளதால்,  ஹேங்கோவரில் இருந்து விடுபட்டு உடலை மறுசீரமைக்க உதவுகிறது.

எப்படி செய்வது?

2 கப் – தேங்காய் நீர் மற்றும் 1 கப் மென்மையான தேங்காய்  அரைகப் பாலுடன் நாட்டு சக்கரை  சேர்த்து ஒன்றாக கலக்கும் குடுவையில் கலக்கவும். ஒரு கிளாஸில் ஊற்றி குளிர்ந்த பரிமாறவும்.

ஸ்ட்ராபெரி மற்றும் பாதாம் மில்க் ஷேக்

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் அழற்சி எதிர்பக்கும் குணம் உள்ளதால்,உடலில் உள்ள வீக்கத்தை எதிர்த்துப் போராடும். மேலும் பாதாம் மெக்னீசியத்தின் நல்ல மூலப்பொருளாகும். அதிகப்படியான மது அருந்துவதால் உடலில் உள்ள மெக்னீசியம் அதிகமாக உதவுகிறது.

எப்படி செய்வது?

தயிர், முழு கொழுப்பு பால் சில ஸ்ட்ராபெர்ரிகள், சில பாதாம் மற்றும் சிறிதளவு தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அருந்தினால் ஹேங்கோவரில் இருந்து விடுபடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hangover after new year party some tips for you