ஹன்சிகா- சோஹேல் திருமணம்; எந்த ஃபங்ஷனுக்கு என்ன டிரஸ்? என்ன அணிகலன்கள்?

ஹன்சிகா மோத்வானி- சோஹேல் கதுரியா உடனான திருமணத்தில் சிவப்பு நிற லெஹங்காவில் அழகாக தோன்றினார்; அவர்களின் திருமண விழாக்களில் அவர்கள் அணிந்த உடை மற்றும் அணிகலன்களின் விவரங்கள் இங்கே

ஹன்சிகா- சோஹேல் திருமணம்; எந்த ஃபங்ஷனுக்கு என்ன டிரஸ்? என்ன அணிகலன்கள்?

ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் நடைபெற்ற ஆடம்பரமான விழாவில், ஹன்சிகா மோத்வானி, நீண்டகால நண்பரும் தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். கனவு திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, அதில் புதுமணத் தம்பதிகள் மிகவும் அழகாக இருக்கிறார்கள். திருமணத்திற்காக, இந்த ஜோடி பாரம்பரிய ஃபேஷன் வழக்கத்திற்குச் சென்று சிவப்பு மற்றும் தந்த நிறத்தின் உன்னதமான கலவையைத் தேர்ந்தெடுத்தது.

ஹன்சிகா தங்க நகைகள் மற்றும் எம்பிராய்டரி கொண்ட செழுமையான சிவப்பு நிற லெஹங்கா அணிந்திருந்தார். ஒரு அழகுபடுத்தப்பட்ட துப்பட்டாவை அவர் தனது வலது தோளில் அணிந்திருந்த நிலையில், ​​மற்றொரு மெல்லிய துப்பட்டா ஹன்சிகா தலையை மூடி இருந்தது.

இதையும் படியுங்கள்: தீபங்கள் பேசும் திருக்கார்த்திகை வாழ்த்துகள், ஸ்டேட்டஸ், படங்கள்

அணிகலன்களைப் பொறுத்தவரை, நடிகை ஹன்சிகா கனமான கல் பதித்த கழுத்துப்பட்டை, காதணிகள், நெத்திச்சூடி மற்றும் சிவப்பு திருமண வளையல்களைத் தேர்ந்தெடுத்தார். ஹன்சிகாவின் மெஹந்தி அணிந்த கைகளில் அசத்தலான தங்கக் கலரி தாராளமாக தொங்கியது.

சோஹேல், மணமகள் ஹன்சிகா உடைக்கு ஏற்றவாறு எம்ப்ராய்டரி ஐவரி ஷெர்வானியுடன் பொருந்திய பழுப்பு நிற துப்பட்டாவை அணிந்திருந்தார்.

இதற்கு முன், ஹன்சிகா மற்றும் சோஹேலின் ஹால்டி (மஞ்சள் வைக்கும் சடங்கு) விழாவின் படங்கள் ஆன்லைனில் வெளிவந்தன, அதில் ஹன்சிகா-சோஹேல் ஜோடி பொருத்தமான உடை மற்றும் அலங்காரங்களுடன் எப்போதும் போல் ஒளிர்ந்தனர்.

ஹன்சிகா பூக்கள் அச்சிடப்பட்ட வெளிர் மஞ்சள் நிற உடையை மெல்லிய துப்பட்டாவுடன் அணிந்திருந்தபோது, ​​சோஹேல் வெள்ளை நிற பைஜாமாக்களுக்கு மேல் அணிந்திருந்த மலர்களால் அச்சிடப்பட்ட குர்தாவைத் தேர்ந்தெடுத்தார். நெக்பீஸ், காதணி, நெத்திச்சூடி மற்றும் வளையல்கள் அடங்கிய மலர் அணிகலன்களுடன் ஹன்சிகா தனது ஹால்டி விழாவில் தோன்றினார்.

சங்கீத் விழாவிற்கு, ஹன்சிகா, ஹேம்லைனில் குஞ்சம் வைத்த ப்ளவுஸூடன் (ரவிக்கை) அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான இளஞ்சிவப்பு லெஹங்கா செட் அணிந்திருந்தார். வைரம் பதித்த அணிகலன்கள் மூலம் இந்த தோற்றத்தை அவர் மெருகூட்டினார். சோஹேல் ஒரு மினுமினுப்பான கருப்பு ஷெர்வானியில் ஹன்சிகாவுக்கு துணையாக இருந்தார்.

அவர்களின் வெள்ளை-தீம் கொண்ட திருமணத்திற்கு முந்தைய வீடியோக்களில், ஹன்சிகா அலங்கரிக்கப்பட்டு பொருத்தப்பட்ட ப்ளவுஸ் மற்றும் இறகுகள் கொண்ட அடிப்பகுதியுடன் பிரமிக்க வைக்கும் கவுனை அணிந்திருப்பதைக் காணலாம். சோஹேல் ஒரு வெள்ளை டக்ஷீடோவில் (கோட் சூட்) கறுப்பு பௌடி (டை போன்றது) மற்றும் ஒரு ஜோடி கருப்பு ஷூவுடன் அழகாகத் தெரிந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Hansika motwani sohael khaturiya wedding looks details

Exit mobile version