அஞ்சனை மைந்தன் வாயுபுத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன் பிறந்தநாளையே அனுமன் ஜெயந்தி என்று ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் அமாவாசை திதி மற்றும் மூல நட்சத்திரம் இணைகின்ற நாளில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் வெவ்வெறு நாட்களில் இது கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ் பஞ்சாங்க முறைப்படி மார்கழி மாத அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு மார்கழி அமாவாசை, அதாவது அனுமன் ஜெயந்தி டிசம்பர் 30ம் தேதி திங்கள் கிழமை வருகிறது. அன்றைய தினம் காலை 04.44 மணி துவங்கி, டிசம்பர் 31ம் தேதி காலை 05.03 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் டிசம்பர் 30ம் தேதி அதிகாலை 12.19 மணி துவங்கி, டிசம்பர் 31ம் தேதி அதிகாலை 01.12 வரை மூலம் நட்சத்திரம் உள்ளது. இந்த நாளில் முன்னோர் வழிபாட்டுடன் அனுமனையும் விரதம் இருந்து வழிபடுவதால் அதிக நன்மைகள் கிடைக்கும்.
இந்த நாளில் விரதம் இருந்து அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபடுவதால் அனுமனின் அருள் கிடைக்கும். அதோடு ராம நாமம் உச்சரிப்பதும் அளவில்லாத புண்ணிய பலன்களை தரும்.
திருமணம் ஆகாதவர்கள் விரதமிருந்து அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டு வர விரைவில் திருமணம் நடக்கும் நல்ல துணையும் அமையும்.
வீட்டில் அனுமன் திருவுருவப் படம், சிலை இருந்தால், அதனை சுத்தம் செய்து பொட்டு வைக்க வேண்டும். அனுமன் படம் இல்லாதவர்கள் அதை வாங்கி ஒரு மனை பலகையில் வைத்து கோலமிட்டு சந்தனம், செந்தூரத்தால் அபிஷேகம் செய்யலாம்.ளசி மாலை சாற்றி வழிபட வேண்டும்.
அனுமன் ஜெயந்தி அன்று காலையில் விளக்கேற்றி அனுமனை வழிபடலாம். ராமர் அல்லது அனுமன் கோயிலுக்கு சென்று, அனுமனுக்கு துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும், பொரி, அவல், கடலை, சர்க்கரை, வடை, வெண்ணெய், தேன், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகள் நைவேத்தியமாக அனுமனுக்கு படைக்கலாம்.
அனுமன் ஜெயந்தி தேதி,விரத வழிபாட்டு முறை | Hanuman Jayanthi 2024 - Date , Vratham & Worship Method
விரதம் இருப்பவர்கள் காலையில் காபி, டீ, பால் போன்ற நீர் ஆகாரங்களை மட்டும் சாப்பிட்டு நைவேதியம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
அன்றைய நாள் முழுவதும் ஸ்ரீராம ஜெயம் சொல்லுதல் அல்லது எழுதி நாள் முழுக்க வழிபடலாம். ராம நாமம் உச்சரிப்பதும் அளவில்லாத புண்ணிய பலன்களை தரும். அனுமன் மனதை குளிர்விக்க வெண்ணெய் வாங்கி கோயிலில் கொடுத்தால் அனுமன் நெஞ்சில் சாற்றி கொடுப்பார்கள் அதனை வாங்கி குடும்பத்தார் அனைவரும் சாப்பிடலாம்.
அதன்மூலம் நம் மன கவலைகள் நீங்கும் அனுமன் மனம் குளிர்ந்தது போல நம் வாழ்வும் குளிரும் என்று கூறுவார்கள். அனுமன் ஜெயந்தி அன்று, " அனுமன் காயத்ரி மந்திரம்: ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத்!” என்று சொல்லலாம். இதை 9,11,21, 24, 54, 64, 108 என்ற முறையில் மந்திரம் உச்சரிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.