கேரளாவில் பிறந்த நக்ஷ்த்திர, கிடா பூசாரி மகுடி என்ற படத்தில் நடித்து, தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனால் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் தான், இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரையும், புகழையும் தேடித் தந்தது.
அதில் வெண்ணிலா என்னும் கேரக்டரில் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை இழந்த தன் முத்து மாமாவையும், அவரது குழந்தையையும் நேசிக்கும் அப்பாவி பெண்ணாக நடித்தார். முத்து மாமாவை ஸ்வேதாவிடமிருந்து காப்பாற்ற கடவுளிடம் இவர் செய்த ஒவ்வொரு பிரார்த்தனைகளும் இதுவரை தமிழ் சீரியல் உலகம் பார்க்காதவை.
இந்த சீரியலில் ஸ்வேதாவாக வில்லியாக நடித்த சைத்ரா ரெட்டி, கயல் என்ற புதிய சீரியல் மூலம் சன் டிவியில் எண்ட்ரி ஆனார்.
நக்ஷ்த்திரா, இப்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் வள்ளி திருமணம் சீரியலில் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் அழகும், அறிவும் நிறைந்த அடாவடி கிராமத்துப் பெண்ணாக வள்ளி@பேபிமா கேரக்டரில் நக்ஷ்த்திரா நடிக்கிறார். அவளின் அம்மாவாக நளினி நடிக்கிறார். நக்ஷ்த்திரா ஜோடியாக விஜய் டிவி ஈரமான ரோஜாவே சீரியல் புகழ், ஷ்யாம் நடிக்கிறார்.
யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் இந்த இரண்டு சீரியல்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டு சீரியலிலுமே இவர் பாவடை தாவணி, அல்லது புடவை என ஹோம்லி லுக்கில் தான் நடித்திருக்கிறார்.
ஆனால் நக்ஷ்த்திரா உண்மையில் ஒரு மாடர்ன் பெண். தனது இன்ஸ்டாவில் அடிக்கடி மாடர்ன் உடையில் எடுத்த போட்டோஷூட்களை பகிர்வதுண்டு. அதைப்பார்க்கும் போது நிஜமாகவே இவங்கதான் அவங்களா? என ரசிகர்கள் கூட ஆச்சரியப்படுவதுண்டு. அந்தளவுக்கு மாடர்ன் லுக்கிலும் நக்ஷ்த்திரா அழகாக இருப்பார்.
இப்போது நக்ஷ்த்திரா பகிர்ந்த இன்ஸ்டா போஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன் அம்மாவுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை பகிர்ந்து, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா என வாழ்த்தியுள்ளார்.
அதைப் பார்த்த பலரும் நக்ஷ்த்திரா அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“