/tamil-ie/media/media_files/uploads/2021/12/Sonia-Gandhi-1200-1.jpg)
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது அழகிய புடவைகள் மற்றும் அழகான சல்வார் உடைகளின் நேர்த்தியான தொகுப்பைக் கொண்ட அலமாரிகளுடன் மாசற்ற டிரஸ்ஸிங் ஸ்டைலைக் கொண்டுள்ளார். இன்று அவரது பிறந்தநாளில், பல ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் அவரது உன்னதமான மற்றும் ரசனையான டிரஸ்ஸிங் சென்ஸைப் பார்ப்போம்.
சோனியா காந்திக்கு காட்டன் புடவைகளின் மீதுள்ள காதல் அனைவரும் அறிந்ததே, ஏனெனில் அவர் மீண்டும் மீண்டும், பல்வேறு சந்தர்ப்பங்களில் காட்டன் புடவைகளை அணிந்து வருகிறார்.
சோனியா காந்தி இந்த சாதாரண, நேர்த்தியாக மடிக்கப்பட்ட வெள்ளை நிற கட்டங்கள் உடைய புடவையை அருமையாகவும் மற்றும் நேர்த்தியாகவும் அணிந்து அலங்கரித்து வருகிறார்.
2012 இல், சோனியா காந்தி உடை ஒப்பனையை எளிமையாக வைத்திருக்க விரும்புவதாக ஒப்புக்கொண்டார்.
காட்டன் புடவைகளைத் தவிர, பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் அழகான பட்டுப் புடவைகளையும் சோனியா காந்தி அணிந்திருப்பதை நீங்கள் காணலாம்.
புடவைக்கு ஒரு ரசனையான கவர்ச்சியைக் கொடுத்து, அவர் கழுத்தில் பல்லு அணிவதில் ஒரு தனித்துவமான ஸ்டைல் உள்ளது.
குளிர்கால மாதங்களில், சோனியா காந்தி தனது புடவைகள் மற்றும் உடைகளுடன் சிறப்பு பஷ்மினா சால்வைகளை அணிவதை நீங்கள் காணலாம்.
சோனியா காந்தி அணியும் பருத்தி ஆடைகள் வசதி மற்றும் ஸ்டைலின் சரியான கலவையாகும்
பொருந்தக்கூடிய ஹீல்ஸ் கொண்ட இந்த எளிய மற்றும் ஸ்டைலான பீச் உடையில் அவர் கருணை மற்றும் சக்தியின் உருவகமாக இருக்கிறார்.
வெள்ளை சல்வார் மற்றும் துப்பட்டாவுடன் அச்சிடப்பட்ட சிவப்பு குர்தாவை அணிந்திருப்பதால் அவர் தனது அலமாரியை வண்ணமயமாக வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்.
சோனியா காந்தி புடவைகள் மற்றும் உடைகளுடன், பெரும்பாலும் அனைத்து அரசியல் மற்றும் சமூக விழாக்களிலும் கலந்துகொள்வதற்கு ஹை ஹீல்ஸ் அணிவதை விரும்புகிறார்.
படங்கள் : Express Archive
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.