Happy Diwali Wallapapers, Wishes, Greetings, Whatsapp : தீபாவளி திருநாள் இன்று (14/11/2020) சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. நண்பர்கள், உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாற என்றோ துவங்கிவிட்டனர்.
நீங்கள் உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு வாழ்த்துகளை பறிமாற வண்ணமயமான வித்யாசமான வாழ்த்து அட்டைகளை ஐஇ தமிழ் உங்களுக்காக பகிர்கிறது. மடலாக தொகுத்து உள்ள இந்த வாழ்த்து அட்டைகளை அனைவருக்கும் பகிர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை கூறுங்கள்.
நரகாசுரனை வதம் செய்ததற்காக கொண்டாடப்படுவது தீபாவளி – இதுதான் தென்னிந்தியாவில் சொல்லப்படும் புராணக்கதை. ஆனால் வட இந்தியாவிலோ, ராமர் ராவணனை அழித்து பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பிய நன்நாளே இந்நாள் என நம்பப்படுகிறது.இந்துக்கள் மட்டுமல்லாமல் சமணர்களும், சீக்கியர்களும் தீபாவளியில் பங்குபெறுகிறார்கள்.
இந்தியாவில் கொண்டாடப்படுவதை போன்று அதே உற்சாகத்துடன் உலகின் முக்கியமான 10 நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்டுவது கூடுதல் தகவல்.
அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் ஒரே பண்டிகை தீபாவளி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த பண்டிகை அக்பர் காலத்திலேயே இந்து மதத்தினர் கொண்டாடி இருக்கிறார்கள். அப்போது அவர்கள் இந்த பண்டிகையை கொண்டாட எந்தவித தடையும் கிடையாது.