New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/10/Diwali.jpg)
Diwali 2022
Diwali wishes, messages, SMS, images, wallpapers, quotes, status to share with your loved ones | தீபாவளியன்று உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ள சில வாழ்த்துகள், செய்திகள், படங்கள், மேற்கோள்கள் மற்றும் வால்பேப்பர்கள் இங்கே..
Diwali 2022
Happy Diwali 2022 | Diwali wishes | இனிய தீபாவளி 2022 | தீபாவளி வாழ்த்துக்கள் | தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் மக்கள், தங்களின் இல்லங்களை அலங்கரித்தும், தீபங்களை ஏற்றி வைத்தும், புத்தாடைகளை அணிந்தும், உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பகிர்ந்து உண்டும், உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்
இது குடும்பங்கள் ஒன்று கூடி கொண்டாடும் பண்டிகை என்பதால், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் அனுப்பக்கூடிய சில வாழ்த்துக்கள் இங்கே!
இனிய குழந்தைப் பருவ நினைவுகள், வாணவேடிக்கைகள், இனிப்புகள், வீடு முழுக்க விளக்கின் வெளிச்சம், இதயம் நிறைந்த மகிழ்ச்சி.
உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
கோடிக்கணக்கான விளக்குகள் முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வம் ஆகியவற்றால் உங்கள் வாழ்க்கையை எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!
பட்டாசு போல கவலைகள் சிதறிட, மத்தாப்பு போல மகிழ்ச்சிகள் மலர்ந்திட.. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒளிரும் தீபாவளி வாழ்த்துக்கள்!
அகவிருள் அகற்றி அறிவொளி தந்திட உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.