New Update
/indian-express-tamil/media/media_files/jsKeHjMjFbRpAWJb6StF.jpg)
உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூற அழகிய வாட்ஸ் அப் படங்கள், மெசேஜ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
Happy Deepavali (Diwali) 2023 Wishes Images, Quotes, Status: தீப ஒளி திருநாள் இந்தாண்டு நாளை (நவ.12) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, கோயில் சென்று பட்டாசு வெடித்து மகிழ்வர். தீபாவளி என்பது 5 நாள் திருவிழாவாகும், இது தண்டேராஸுடன் தொடங்கி பாய் தூஜ் உடன் முடிவடைகிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி, வாழ்த்து கூறி மக்கள் மகிழ்வர்.
அந்த வகையில், உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூற அழகிய வாட்ஸ் அப் படங்கள், மெசேஜ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த தீபாவளி திருநாளில் தீமைகள், வெறுப்பு உணர்வு நீங்கி நன்மைகள் சேர்க்கும் திருநாளாகும். திருவிழாவின் உணர்வைக் கொண்டாட அனைவரும் ஒன்று சேருவோம். இனிய தீபாவளி வாழ்த்துகள்!
பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் இதயம் நிறைந்த மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
இந்த தீப ஒளி முடிவில்லாத மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் செல்வத்துடன் உங்கள் வாழ்க்கையை எப்போதும் ஒளிரச் செய்யட்டும். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!
தீபாவளி திருநாளில் உங்கள் வீடு மகிழ்ச்சியுடன் நிரம்பட்டும். எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சி உடன் இருங்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.