Happy Diwali 2025 Tamil Wishes: அன்னை தமிழில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க... அழகான படங்கள், கார்டுகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இங்கே!

Diwali 2025 Wishes and Images in Tamil: தீபாவளி பண்டிகை நாளில் உங்கள் அன்பானவர்களூக்கு தீபாவளி வாழ்த்து செய்தி அனுப்ப அழகான வாசகங்களுடன் படங்கள், வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் படங்கள் இங்கே தருகிறோம். இதைப் பயன்படுத்தி தீபாவளி வாழ்த்து தெரிவியுங்கள்.

Diwali 2025 Wishes and Images in Tamil: தீபாவளி பண்டிகை நாளில் உங்கள் அன்பானவர்களூக்கு தீபாவளி வாழ்த்து செய்தி அனுப்ப அழகான வாசகங்களுடன் படங்கள், வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் படங்கள் இங்கே தருகிறோம். இதைப் பயன்படுத்தி தீபாவளி வாழ்த்து தெரிவியுங்கள்.

author-image
WebDesk
New Update
Diwali wish chat gpt

Image caption: Diwali 2025 best wishes and Images Image alt: Happy Diwali 2025 Wishes and Images| Diwali Greetings and celebrations photos in Tamil

Diwali 2025 Wishes, Images and Quotes: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் அக்டோபர் 20-ம் தேதி மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை நாளில் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு, குடும்ப உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு, குழந்தைகளுக்கு தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்க உங்களுக்காக இதோ அழகான வண்ண வண்ன புகைப்படங்கள் வாழ்த்து அட்டைகளைத் தருகிறோம்.

Advertisment

நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகையைப் பற்றி புராணங்களில் இந்து மதக் கதைகளில் பல கதைகள் கூறப்படுகிறது. மகாவிஷ்ணு நரகாசூரனை அழித்த நாள் தீபாவளி என்று கூறுகிறார்கள். 

ராமனும், சீதையும் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்த பிறகு, இலங்கையில் ராவணன் எனும் அரசனை இலங்கையில் கொன்று விட்டு , தங்கள் நாடான அயோத்திக்கு திரும்பிய பொழுது, அயோத்தி மக்கள் விளக்கேற்றி வரவேற்ற தினத்தைத்தான் தீபாவளியாக கொண்டாடி மகிழ்ந்தனர் எனும் செய்தி சொல்லப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் சமணம் செழித்திருந்த காலத்தில் மகாவீரர் மறைந்த நிர்வாணம் அடைந்த நாளை நினைவுகூரும் விதமாக தீபாவளி பண்டிகை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

சீக்கியர்கள் தங்களது ஆறாவது குருவான “குரு ஹர்கோபிந்த் சிங்” சிறையிலிருந்து விடுதலையான நாளை தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.

தென்னிந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் அயோத்திதாசர் பண்டிதர் தீபாவளியை ஒரு பௌத்த பண்டிகையாகக் கூறுகிறார்.

தீபாவளியைப் பற்றி எந்த மதம் என்ன கதைகள், என்ன காரணம் கூறினாலும், நவீன காலத்தில் தீபாவளி என்றால், புத்தாடை, பட்டாசு, இனிப்பு, பலகாரம், விருந்து என வழக்கமாகி இருக்கிறது.

Deepawalil wish canva 3
தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம், இருளின் மீது ஒளி, தீமையின் மீது நன்மை, அறியாமையின் மீது அறிவு மற்றும் நம்பிக்கையின் மீது விரக்திக்கு கிடைத்த வெற்றியாகும். Photograph: (Canva)

அதே நேரத்தில், தீபாவளி பண்டிகை நாளில், அன்புக்குரியவர்களுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு, இளம் உறவுகளுக்கு என அனைவருக்கும் வாட்ஸ்அப் வழியாக தீபாவளி வாழ்த்து தெரிவித்து படங்கள் அனுப்புகின்றனர். உங்கள் அன்பானவர்களூக்கு தீபாவளி வாழ்த்து செய்தி அனுப்ப அழகான வாசகங்களுடன் படங்கள், வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்,  தீபாவளி வாழ்த்து படங்கள் இங்கே தருகிறோம். இதைப் பயன்படுத்தி தீபாவளி வாழ்த்து கூறுங்கள்.

தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம், இருளின் மீது ஒளி, தீமையின் மீது நன்மை, அறியாமையின் மீது அறிவு மற்றும் நம்பிக்கையின் மீது விரக்திக்கு கிடைத்த வெற்றியாகும்.

Deepawali wish T2
தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம், இருளின் மீது ஒளி, தீமையின் மீது நன்மை, அறியாமையின் மீது அறிவு மற்றும் நம்பிக்கையின் மீது விரக்திக்கு கிடைத்த வெற்றியாகும். Photograph: (chatgpt)

இருள் நீங்கி ஒளி சேரட்டும் வாழ்வில், இனிமையைப் பொழியட்டும் இத்தீபத் திருநாள்; உங்கள் உள்ளம் மகிழ இனிய தீபாவளி வாழ்த்துகள்.

diwali canva 6
இருள் நீங்கி ஒளி சேரட்டும் வாழ்வில், இனிமையைப் பொழியட்டும் இத்தீபத் திருநாள்; உங்கள் உள்ளம் மகிழ இனிய தீபாவளி வாழ்த்துகள். Photograph: (canva)

அகல் விளக்குகள் அள்ளித்தரும் ஒளியில், ஆணவம் நீங்கட்டும்; அன்பு பெருகட்டும்; மகிழ்ச்சி பொங்க இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

diwali canva 10
இருள் நீங்கி ஒளி சேரட்டும் வாழ்வில், இனிமையைப் பொழியட்டும் இத்தீபத் திருநாள்; உங்கள் உள்ளம் மகிழ இனிய தீபாவளி வாழ்த்துகள். Photograph: (Freepik.com)

பட்டாசுச் சத்தம் மனதினில் இல்லை, பல்லாண்டு இன்பம் நிலைக்கட்டும் வாழ்வில்; செல்வச் செழிப்புடன் வாழ்க, தீபாவளி வாழ்த்துக்கள்.

Diwalil canva 8
இருள் நீங்கி ஒளி சேரட்டும் வாழ்வில், இனிமையைப் பொழியட்டும் இத்தீபத் திருநாள்; உங்கள் உள்ளம் மகிழ இனிய தீபாவளி வாழ்த்துகள். Photograph: (Freepik)

தீபங்களின் வெளிச்சம் தீயவை அகற்ற, ஞானத்தின் ஒளி உள்ளே ஏற்றட்டும் உன்னதத்தை; புன்னகை பூக்க இனிய தீபாவளி வாழ்த்துகள்.

உதிரட்டும் துயரம், உதிக்கட்டும் புது நம்பிக்கை, வானுயரப் பறக்கட்டும் வெற்றிப் பட்டாசு; வளமான தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கு!

Diwali

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: