Bakrid 2019 wishes, Eid al Adha 2019 Images, eid greeting quotes: உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத். இது ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான ‘துல் ஹஜ்’ஜின் 10வது நாளில் கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் அடிப்படை கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் செய்வது.
இதன் இறுதியில் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை இறைவனுக்கு பலியிட வேண்டும். இவ்வாறு செய்து கொண்டாடுவதை ’பக்ரீத்’ என்கின்றனர். இதனை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர். இந்தியாவில் இன்று (ஆக. 11) முதல் நாளை (ஆக.12) மாலை வரை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மதம் பார்க்காது, இந்திய மக்கள் பெரும்பாலானோர் இந்த பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். உங்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக வாழ்த்து மெசேஜ்களை அவர்களுக்கு அனுப்பி அசத்துங்கள்.
இந்த நாளில் மட்டன் பிரியாணி, மட்டன் குர்மா, மட்டன் கீமா, புனி கலேஜி, ஷீர் குர்மா, கீர் உள்ளிட்டவை சிறப்பு உணவுகளாக தயாரிக்கப்பட்டு பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்கின்றனர்.
இறைத் தூதர்களில் ஒருவர் என்று நம்பப்படுபவர் இப்ராஹிம். இவர் ஈராக் நாட்டில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. இந்த சூழலில் தனது இரண்டாவது மனைவி ஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘இஸ்மாயீல்’ என்று பெயர் சூட்டினர்.
இஸ்மாயீலுக்கு 13 வயது ஆன போது, ஒரு நாள் இப்ராஹிமின் கனவில் கடவுள் வந்துள்ளார். அப்போது, இஸ்மாயீலை தனக்கு பலி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இதுகுறித்து தனது மகனிடம் கூறி விளக்கி விட்டு, அவனை இப்ராஹிம் பலியிடத் தொடங்கினார். இவரின் அளவற்ற இறை நம்பிக்கையை எண்ணி, கடவுள் ஆச்சரியமடைந்தார்.
இந்நிலையில் ‘சிஃப்ரயீல்’ என்ற தூதரை அனுப்பி, இப்ராஹிமின் செயலை கடவுள் தடுத்துள்ளார். மேலும் ஒரு ஆட்டை அளித்து, அதனை இஸ்மாயீலுக்கு பதிலாக பலியிடுமாறு கட்டளை இட்டுள்ளார். எனவே இப்ராஹிமின் தியாக உணர்வை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கால்நடைகளை பலியிட்டு ’பக்ரீத்’ கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டில் பக்ரீத் பண்டிகை நாளை ஆகஸ்ட் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Happy eid al adha 2019 wishes images quotes messages sms greetings wallpaper photos pics
காங்கிரசை முன்கூட்டியே ‘கவனிக்கும்’ திமுக: மற்ற கூட்டணிக் கட்சிகள்?
அர்ச்சனா வீட்டுல விசேஷம்… குவிந்த டிவி பிரபலங்கள்: என்னா ஆட்டம்?
தேன்மொழி நடிகையின் உலகமே இவரால் அழகாகி விட்டதாம்: யாரு அவரு?
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து : 6 பேர் உடல் கருகி பலி
ஃபார்முக்கு திரும்பிய பிரித்வி ஷா: 227 ரன்கள் குவித்து சாதனை