scorecardresearch

சர்வதேச நண்பர்கள் தினம் – சே குவேராவும் மோட்டார் சைக்கிள் நண்பனும்

Che and the motor cycle diary, Friendship day: பயணத்தின் ஆரம்பத்தில் அவர்களின் இலக்கு வேறொன்றாக இருந்தது. ஆனால் பயணத்தின் முடிவு வரலாறாக மாற்றம் அடைந்தது.

சர்வதேச நண்பர்கள் தினம் – சே குவேராவும் மோட்டார் சைக்கிள் நண்பனும்

Friendship Day 2018: நம் வாழ்வின் தோல்விகள் அனைத்தையும் நம்முடன் சேர்ந்து சமாளிக்கும் ஒரு சிலரே நம்முடைய வெற்றிகளை பகிர்ந்து கொள்ள தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். பெற்றவர்கள் இதில் முக்கிய பொறுப்பு வகித்தாலும், முதல் உரிமை பெறுகின்றவர்கள் என்றுமே நண்பர்கள் மட்டுமே. அதனால் தான் நம் வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நண்பர்களும் மிக முக்கியமானவர்கள் ஆகின்றனர்.

Che and the motor cycle diary on happy friendship day 2018:

பால்யம் தொடங்கி, பதின்பருவம், இளமைக் காலம், மத்திய வயது, பின்பு சாகும் காலம் வரை நம்முடன் பயணிக்க ஒரே  ஒரு உற்ற நண்பன் அமைவதெல்லாம் ஒரு வரம் தான். அப்படியாக அமையப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள் கூட.

இங்கும் அப்படியாய் சில நண்பர்கள் நம்முடைய ஃபிரெண்ட்ஸ்ஷிப் கோல்களை  “Friendship Goals” செட் செய்ய உதவுகிறார்கள்.

மோட்டர் சைக்கிள் டைரி

நமக்கு பிடித்த நண்பர்களுடன் உலகைச் சுற்றிவர விரும்புவது ஒரு வகையில் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு செயலாகவே இருக்கும். அதுவும் மோட்டர் சைக்கிளில் என்றால் அது இன்னும் நலம் தான் என்று பல வருடங்களுக்கு முன்பே யோசிக்க வைத்தது சேவும் சேவுடைய நண்பர் க்ரானாடோவும் தான்.

23 வயதான மருத்துவம் படிக்கும் மாணவன் சேவும் அவருடைய நண்பர் ஆல்பெர்ட்டோ க்ரானாடோவும் லத்தீன் அமெரிக்காவினை சுற்றி வர விரும்பியதன் விளைவு தான் வரலாற்றில் சேகுவை நமக்கு அறிமுகப்படுத்தியது.

அவர்களின் எட்டாயிரம் கிலோ மீட்டர் பயணம் அவர்கள் வாழ்வில் மட்டுமல்ல லத்தீன் அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு நாட்டின் அரசியலையும் நிர்ணயிக்கும் சக்தியாக அமையும் என்பதை யாரும் அப்போது உணர்ந்திருக்கமாட்டார்கள்.

மோட்டர் சைக்கிள் டைரி புத்தகம்
மோட்டர் சைக்கிள் டைரி புத்தக முகப்பு

இருவரும் சேர்ந்து வெகு தூரம் பயணித்தார்கள், கிடைத்ததை உண்டார்கள், வேலை செய்தார்கள். அந்த பயணம் தான் தென் அமெரிக்க மக்களின் வாழ்வு முறையைப் பற்றிய புதிய சிந்தனைகளை தூண்டியது என்றும் கூறலாம். ஒவ்வொரு நாடும் அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தை கற்றுக் கொடுத்தது.

மோட்டர் சைக்கிளில் மட்டுமல்லாமல் அவர்கள் படகு, குதிரை, பேருந்து என எதையும் விட்டு வைக்காமல் பயணித்தனர். பயணத்தின் ஆரம்பத்தில் அவர்களின் இலக்கு வேறொன்றாக இருந்தது. ஆனால் பயணத்தின் முடிவு வரலாறாக மாற்றம் அடைந்தது.

பயணங்களுக்கு பின்னான நாட்களில் சேவும் க்ரனாடோவும்

க்ரானாடோ வெனிசுலா நாட்டில் இருக்கும் தொழு நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பில் நின்று கொள்ள சேவோ வெகு தூரம் பயணித்தார். அந்த பயணத்திற்கு பின்னால் சுமார் எட்டு வருடங்கள் இருவரும் சந்திக்கவே இல்லை. சே மருத்துவரானார். பின்னர் பிடல் காஸ்ட்ரோவின் க்யூபா புரட்சியில் பெரும் பங்கு வகித்தார்.

சேவின் நேர்மையை என்றுமே பெருமையுடன் பார்த்த க்ரனாடோ 2011ம் தேதி மறைந்தார். சே 1967ல் பொலிவிய சிறையில் மரண தண்டனையை ஏற்றுக் கொண்டு உயிர் துறந்தார்.

இவர்களின் இந்த பயணம் மோட்டர் சைக்கிள் டைரி என்ற பெயரில் புத்தகமானது பின்பு படமாக்கப்பட்டது. படத்தின் இறுதி காட்சிகளில் உண்மையான க்ரனாடோ நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றும் அந்த நார்டன் 500சிசி மோட்டர் சைக்கிளும், புதிய பயணங்களும் ஒவ்வொரு நட்பு உறவுகளிலும் இருக்கும் மிக முக்கியமான Friendship Goal ஆக இன்றும் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.  உங்களின் மோட்டர் சைக்கிள் டைரி கனவினை நீங்கள் நிறைவேற்றுவது எப்போது?

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Happy friendship day 2018 che and the motor cycle diary