சர்வதேச நண்பர்கள் தினம் – வரலாற்று ஆளுமைகளின் உற்ற நண்பர்கள்

Hitler's Best Friend on Friendship Day 2018: ஹிட்லருக்கும் எனக்குமான நட்பு என்பது மெய்யானது. ஹிட்லர் என் உற்ற நண்பன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

By: Updated: August 5, 2018, 11:29:03 AM

ஹிட்லரின் நண்பர்

Hitler’s Best Friend : ஹிட்லர் என்றாலே நம் அனைவருக்கும் இரண்டாம் உலகப் போரின் கோர வடிவமும், அந்த கடுமையான, இறுக்கமான முகமும் தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், முப்பது ஆண்டுகள் கழித்தும், தன்னுடைய பால்ய கால நட்பினை துளி கூட மறக்காமல், தனது நண்பனின் நட்பினை மீண்டும் புதுப்பித்துக் கொண்டவர் ஹிட்லர்.

ஹிட்லரும் ஆகஸ்ட் குபிஸெக் இருவருக்கும் மேடை நாடகங்களில் அலாதி பிரியம் என்ற ஒரு காரணமே அவர்கள் இருவரையும் இணைத்து வைத்திருந்தது. இருவரும் இசையை கற்றுக் கொள்ளவும் ஆர்வமுடன் இருந்தனர். மேலும் ஆகஸ்ட்டிற்கு நாடக மேடைகளில் இசைக்க விருப்பம் அதிகம் இருந்ததாலும், அதற்காக அவர் வியன்னா செல்ல விரும்பியதையும் அறிந்த ஹிட்லர், ஆகஸ்ட்டிற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.

இருவரும் ஒரே சமயத்தில் அங்கே படிக்க முற்பட்டும் இறுதியில் ஆகஸ்ட்டிற்கு மட்டுமே அதில் இடம் கிடைத்தது. அதற்கு பின்பு அவர்களின் நட்பில் சிறு பிரிவு ஏற்பட்டது. சுமார் 30 வருடங்களுக்கு மட்டும் தான்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆகஸ்ட் இசை பயின்று அதில் வல்லுநரானார். பின்பு இருவரும் இரு வேறு பகுதிகளில் முதல் உலகப் போரில் நாட்டுக்காக பங்கேற்றார்கள். ராணுவத்தில் இருந்து திரும்பி வந்த ஆகஸ்ட்டிற்கு அரசு பதவி தரப்பட்டது. இசை அவருக்கு பொழுது போக்காக மாறியது.

அதே இடைப்பட்ட காலத்தில் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றார். பல்வேறு திருப்பங்களை இருவரும் சந்திக்க நேரிட்ட பின்பும் கூட, ஹிட்லருக்காக 30 வருடங்கள் கழித்து கடிதம் எழுதினார் ஆகஸ்ட்.

ஹிட்லரின் பதவியும் பொறுப்பும் மிகப் பெரியது. இருப்பினும் ஆகஸ்ட்டிற்காக நேரம் ஒதுக்கி கடிதம் எழுதியவர் ஹிட்லர். ஆகஸ்ட்டினை பார்ப்பதற்காக லின்ஸ் வந்திருந்தார் ஹிட்லர். அவருக்கு அரசு சார்பில் பணி வழங்க ஏற்பாட்டினை செய்தார் ஹிட்லர். ஆனாலும் ஆகஸ்ட் அதை பெருந்தன்மையாக மறுத்துவிட்டார். இருப்பினும் ஆகஸ்ட்டின் மூன்று மகன்களும் படிப்பதற்கான செலவினை ஏற்றுக் கொண்டார் ஹிட்லர்.

1942ல் நண்பனுக்காக என்று நாஜியில் இணைந்தார் ஆகஸ்ட். ஆகஸ்ட் அம்மாவின் 80வது பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கடிதம் எழுதி அனுப்பினார் ஹிட்லர்.

நட்பு ரகசியம் காக்கும்

உலகப் போரில் பங்கேற்று பெரிய அளவில் இனப்படுகொலை செய்வதற்காக நான் பதவி ஏற்கவில்லை என்று அடிக்கடி ஹிட்லர் ஆகஸ்ட்டிடம் கூறியதுண்டு.

தான் தன்னுடைய இளமைப் பருவத்தில் வரைந்த ஓவியங்கள் மற்றும் மிக முக்கியமான பல பொருட்களை ஆகஸ்ட்டிடம் கொடுத்து வைத்திருந்தார் ஹிட்லர்.

தன்னுடைய இளமை வயதில் ஸ்டெபினி என்ற பெண் மீது தீராத காதல் வைத்திருந்தார் ஹிட்லர் என்றும், அவருக்காக நிறைய கடிதங்கள் எழுதி ஸ்டெபினியிடம் சேர்க்கவில்லை என்றும் தன்னுடைய புத்தகத்தில் ஹிட்லர் பற்றி நமக்கு தெரியாத பல விசயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார் ஆகஸ்ட்.

What Hitler’s best friend said about Hitler on Friendship Day 2018

1906 – 1908 வரை இருவரும் உற்ற நண்பர்களாக விளங்கினார்கள். ஒரு காலத்தில் இருவரும் ஒரே வீட்டில் குடியிருந்தார்கள்.

படிப்பு என்று இருவரும் பிரிய 1933ம் ஆண்டு நண்பன் ஜெர்மனியின் அதிபரானதிற்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதினார் ஆகஸ்ட். உன்னோடான அழகான நாட்களை நான் மீண்டும் நினைவு கூறுகிறேன் என்று பதில் கடிதம் எழுதுகிறார் ஹிட்லர்.

1938ல் இருவரும் மீண்டும் சந்திக்கிறார்கள். சுமார் 30 வருடங்கள் கழித்து. வெகு நேரம் தங்களின் பால்ய காலம் பற்றி பேசிக் கொள்கிறார்கள். மீண்டும் இருவரும் 1940லும் 1944லும் சந்திக்கிறார்கள். 44ல் தன்னுடைய தனி உடைமைகளை நம்பிக்கையுடன் ஆகஸ்ட்டிடம் கொடுத்துவிட்டு போரில் இறந்து போகிறார் ஹிட்லர்.

ஆகஸ்ட்டினை கைது செய்தது அமெரிக்க அரசு. அவரை பல நாட்கள் விசாரித்தும் ஹிட்லர் பற்றியோ அவரின் தனி உடமைகள் பற்றியோ அவர் எதுவும் வாய் திறக்கவில்லை. ஹிட்லரின் உடமைகள் அனைத்தையும் பாதுகாப்பாக யார் கைகளிலும் சிக்காமல் பாதுகாப்பாக வைத்திருந்தார் ஆகஸ்ட்.

ஹிட்லர் இறந்த பின்பு ஹிட்லரின் மகிழ்ச்சியான மற்றொரு இளமைப்பருவ  வாழ்வினை மூன்று பகுதிகள் கொண்ட Adolf Hitler, My Childhood Friend என்ற புத்தகத்தினை 1951ல் எழுதினார்.

ஹிட்லருக்கும் எனக்குமான நட்பு என்பது மெய்யானது. ஆயிரம் அரசியல் மற்றும் சூழ்நிலை காரணமாக ஹிட்லரை வெறுப்பவர்கள் லட்சக் கணக்கில் இருந்தாலும் அவன் என் உற்ற நண்பன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அடிக்கடி ஆகஸ்ட் குறிப்பிடுவாராம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Happy friendship day 2018 what hitlers best friend said about hitler and their early life

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X