/tamil-ie/media/media_files/uploads/2020/08/image-36.jpg)
Happy Friendship Day 2020 Wishes Images:
நட்பு மிகவும் அழகானது, ஆழமானது. அனைத்து நண்பர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாக இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. கடினமான காலங்களில் உதவுவது முதல், சிரிப்பை நம் வாழ்வில் அறிமுகப்படுத்தியது வரை, நாம் தேர்ந்தெடுத்த ஒரு குடும்பமாகவே நண்பர்கள் உள்ளனர்.
நட்பைக் கொண்டாட ஏதேனும் சிறப்பு காரணம் தேவைப்படுகிறதா என்ன ?
ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. 2020 ஆம் ஆண்டின், நண்பர்கள் தினம் இன்று (ஆகஸ்ட் 2 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது.
இந்த சிறப்புமிக்க நாளில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் சாக்லேட்டுகள், இனிப்புகள், மலர்கள்,வாழ்த்து அட்டைகள் போன்றவைகளை பரிசளித்து மகிழ்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான மன உளைச்சலுக்கு நாம் ஆளாகியுள்ளோம். இதுபோன்ற ஒரு நெருக்கடியான காலகட்டங்களில், உங்கள் நண்பர்களை விரும்புவதற்கும், உங்கள் வாழ்கையில் அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை எடுத்துரைக்கவும் இதை விட நல்ல தருணம் அமையாது.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் புகைப்படங்கள்:
நட்பு எனது வாழ்வை முழுமையாக்கியது! இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !
நீங்கள் வாழ்க்கையில் எத்தனை நண்பர்களைக் கொண்டிருக்கிறீர்கள், என்பதை பொருத்து தான் உங்களின் மகிழ்ச்சி அளவிடப்படும். எனவே, நண்பர்களை கண்டுபிடியுங்கள். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள். நீண்ட தூரம் வாழ்வில் ஒன்றாக பயணிக்க விரும்புகிறோம்.
அன்புள்ள நண்பா! எப்போதும் என்னுடன் நட்பு பாராட்டியதற்கு நன்றி. உனது, நினைவுகள் ஒருபோதும் மங்காது. எப்போதும் எனது இதயத்தில் நிலைத்திருப்பாய். இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
என்றும், என்றென்றும் - நண்பர்கள் தின வாழ்த்துக்கள்தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us