Happy Vinayak Chaturthi Wishes, Images, Messages: நாடு முழுவதும் செப்.2 விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறை நாளான இன்று இந்தியா முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி வந்திருப்பதால், பொதுமக்கள் பலரும் தொடர் விடுமுறையை பயன்படுத்தி சொந்த ஊருக்கு படையெடுத்திருக்கின்றனர்.
மன்னர் சத்ரபதி சிவாஜியின் காலத்திலேயே விநாயகர் சதுர்த்தி விழா பிரபலமாகிவிட்டாலும் இன்று நாம் பார்க்கும் விநாயகர் விழா கொண்டாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் தலைவரான பாலகங்கார திலகர் தான்.
1893ம் ஆண்டு "சர்வஜன கனேஷ் உத்சவ்" என்ற பெயரில் இவர் ஆரம்பித்து வைத்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களே இன்றுவரை மக்கள் மிகப் பெரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர்.
புராணப்படி அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தவமிருந்து, சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டதன் பயனாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.
இவர் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினம் விநாயக சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.
நீடூழி வாழ
செல்வ செழிப்போடு வாழ
உற்றார், உறவினர்கள் புடைசூழ் வாழ
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்
துன்பங்களை நீக்கி
இன்பங்களை பெருக்கி
தீமையை நீக்கி
நன்மையை பெருக்கி
வறுமையை போக்கி
செல்வத்தை பெருக்கி
உங்கள் வாழ்வில் எல்லா நல் அம்சங்களையும்
விநாயகப் பெருமான் அருள் புரிய வாழ்த்துகள்
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நேரம்?
விநாயகர் சதுர்த்தி தேதி: 2019 செப்டம்பர் 2, திங்கட் கிழமை
விநாயகர் சிலை கரைப்பு தேதி: 2019 செப்டம்பர் 12, வியாழக்கிழமை
விநாயகர் பூஜைக்கு ஏற்ற நேரம்: காலை 11.05 மணி முதல் 1:36 மணி வரை
சதுர்த்தி திதி தொடங்கும் நேரம்: 2019 செப்டம்பர் 2, அதிகாலை 4:57
சதுர்த்தி திதி முடியும் நேரம்: 2019 செப்டம்பர் 3, அதிகாலை 1:54
நேயர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.