/indian-express-tamil/media/media_files/4nYbRFNCs9xtn8nneEHy.jpg)
Happy Ganesh Chaturthi 2023 wishes
சதுர்த்தி திதி கணேசருக்கு மிகவும் உகந்த நன்னாள். ஒவ்வொரு தமிழ் ஆண்டும் ஆவணி மாதம் அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று "விநாயக சதுர்த்தி' பூஜை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு செப்.18 திங்கள் கிழமை விநாயக சதுர்த்திகொண்டாடப்படுகிறது
பொதுவாக எந்த நல்ல காரியங்களை ஆரம்பிக்கும் போது அவை தடைகள் இன்றி நடைபெறுவதற்கு மஞ்சளினால் செய்த பிள்ளையாரை பூஜை செய்து வழிபாட்டுடன் துவக்குவது வழக்கம்.
அந்தவகையில் விநாயக சதுர்த்தி அன்று விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நன்னாளில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள், அன்பானவர்களுக்கு அனுப்பி மகிழ இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ், படங்கள் இங்கே….
வெற்றிகளை அளிக்கும் வித்தகக் கடவுளான விநாயகப் பெருமானை எந்நாளிலும் வழிபடுவோம்
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
நம்பிக்கையுடன் அந்த தும்பிக்கையானை வழிபட்டால் கற்பகத் தருவாக இருந்து வாழ்வில் நாம் நலம் பெற வேண்டியவைகள் அனைத்தையும் அருளுவார்.
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
ஓம் கன கணபதாய நமோ நமஹ! ஸ்ரீ சித்தி விநாயக நமோ நமஹ! அஸ்த விநாயக நமோ நமஹ!
இந்த விநாயக சதுர்த்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்
விநாயகப் பெருமான் உங்கள் கவலைகள், துக்கங்கள் அனைத்தையும் அழித்து, உங்கள் வாழ்க்கையை அன்புடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்.
இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்
கணபதி நீங்கள் செய்யும் அனைத்திலும் வெற்றியைத் தரட்டும்.. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.