இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.
Advertisment
எல்லோரும் சுதந்திர தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றுதான் காந்தியடிகள் விரும்பினார். ஒற்றுமையாக, அமைதியாக, அன்போடு கொண்டாட வேண்டும் என்றே எண்ணினார்.
நம்முடைய இந்தியச் சமுதாயம் நாகரிகமான சமுதாயம் என்பதை உலகுக்கு உணர்த்த சமூக நீதியுடன் கூடிய ஒற்றுமை உணர்வோடு அனைத்துத் தரப்பு மக்களும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதுதான் காந்திக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.
இந்த சுதந்திர தினத்தில் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருக்கு அனுப்பி மகிழ சுதந்திர தின வாழ்த்துகள், மெசேஜ், ஸ்டேட்டஸ், போட்டோஸ் இங்கே….
நான் பிறந்தது என் தாயின் மடியில் ஆனால் நான் தவழ்ந்து நடந்தது எல்லாம் என் பாரதத்தாயின் மடியில்.
சுதந்திர தின வாழ்த்துகள்
சுதந்திரத்திற்காகப் போராடும் லட்சியவாதிகள் அழிந்துபோகலாம்..! ஆனால் சுதந்திர வேட்கை அழியவே அழியாது..!
சுபாஷ் சந்திரபோஸ்.
உலகின் வேறெந்த நாட்டையும் விட மேலான எனது நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டத்தையும், மகிழ்ச்சியையும், அன்பையும் காண சூரிய தேவன் இங்கு வரட்டும்!
பகத் சிங்
உற்ற நட்பை கற்பென கொள்வோம்..! கற்ற கல்வியை கண் எனப் போற்றுவோம்..! பெற்ற சுதந்திரத்தை உயிர் எனக் காப்போம்...! அதுவே இந்தியக் குடிமகனின் தனித்த அடையாளம்..!
அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்
தாய்த்திரு நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..!
ஜெய்ஹிந்த்
ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம், சமூகநீதி, நல்லிணக்கம் ஆகிய உயரிய லட்சியங்களே நமது முன்னோர்களின் நோக்கங்களாக இருந்தன. அவற்றை போற்றிப் பாதுகாக்க உறுதியேற்போம்.
சுதந்திர தின வாழ்த்துகள்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil