இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 2023 : ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று, பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் அடைந்ததைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் லாஹோரி வாயிலில் தேசியக் கொடியை ஏற்றினார்.
சுதந்திர தின நாளில் பொதுவாக கலாச்சார நிகழ்ச்சிகள், கொடியேற்ற விழாக்கள் மற்றும் பிற போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று நோய் பாதிப்பு காரணமாக அதிகமான கொண்டாடங்கள் இல்லாமல் மக்கள் தங்கள் வீடுகளில் சுதந்திர தினத்தை தேச பக்தியுடன் கொண்டாடி வந்தனர். கடந்த ஆண்டு (2022) இந்த நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்பியது.
அதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு முற்றிலும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் அரசியல் தலைவர்கள் நாடு முழுவதும் பல இடங்களில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பான நாளில் உங்கள் அன்பானவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க மறக்காதீர்கள். நாட்டின் பெருமையைக் கொண்டாட உங்களின் அன்பானவர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
வாழ்த்து தெரிவிப்பதற்கான சில புகைப்படங்களை இங்கு பார்ப்போம்.
இந்த மகத்தான தேசத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்ள வேண்டிய நாள் இன்று. இந்த சுதந்திர உணர்வு நம் அனைவரையும் வாழ்க்கையில் வெற்றி மற்றும் பெருமைக்கு அழைத்துச் செல்லட்டும். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
சுதந்திரம் விலை இல்லாமல் வராது, நம்முடையதும் இல்லை. இந்த மாபெரும் தேசம் கடந்த காலத்தில் அனுபவித்த இரத்தக்களரி மற்றும் மிருகத்தனத்தை தாக்குதல் சம்பவங்களை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி எப்போதும் குறைவாகவே இருக்கும் ஆனால் அனைவருக்கும் வணக்கம் என்றுமே குறையாது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் வணக்கம் சொல்வோம், சுதந்திர தின வாழ்த்துக்கள்!
இன்று நான் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறேன், அதற்கு காரணம் நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் முயற்சிகள்தான். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
எங்கள் மதம் எதுவாக இருந்தாலும், இறுதியில் நாம் அனைவரும் இந்தியர்கள். நமது தேசம் உலகிலேயே மிகவும் வளமான நாடாக மாறட்டும். இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.