Happy Independence Day : டெல்லி செங்கோட்டையில் நாளை (ஆகஸ்ட் 15 ஆம் தேதி) 73-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றிவைக்க உள்ளார். பலத்த பாதுகாப்புக்கு இடையில் டெல்லி செங்கோடையில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. இன்று காலை முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் இல்லம், குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்திற்கு தயாராகி வரும் டெல்லி செங்கோட்டையின் கலர்ஃபுல் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு..
செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி, கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். பிரதமர் பங்கேற்க உள்ளதால், அவருடைய இல்லத்திலிருந்து செங்கோட்டை வரையிலான சாலைகளிலும், செங்கோட்டை சுற்றியுள்ள சாலைகளிலிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியை பொருத்தவரை, காவல்துறையுடன் இணைந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவால், பதற்றமான சூழல் காணப்படுவதால் வரலாறு காண அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீரிலும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமர் தனது சுதந்திர தின உரையில் காஷ்மீர் மாநில மக்களுக்காக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கடலோர காவல் படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.