உலக மகளிர் தினம்: ஆண்களின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை கவனித்தீர்களா?

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம்.

இன்று சர்வதேச மகளிர் தினம் மொபைல்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ,மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் என்று பத்திரிக்கைகள், டிவி சேனல்கள், சமூகவலைத்தளங்கள் என அனைத்திலும் விளம்பரம் படுத்தப்படும் ஒரு நிகழ்வாகவே இந்த தினம் மாறி வருகிறது.

இப்படி இந்த தினம் மாறிப் போவதற்கு என்ன காரணம்? என்றால் விடை யாருக்கும் தெரியாது. ஆனால்,அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி தான் பார்க்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். ஆனால், உண்மையில் இந்த சமுதாயத்தில் இருக்கும் அனைத்து மகளிருக்கும் பெண்கள் தினம் குறித்து தெரியுமா?

மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. அதேசமயம், பெண்கள் தினத்தை பெண்களை விட ஆண்கள் சிறப்பாக கொண்டாடும் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியும் நம்மை உற்று நோக்க வைத்துள்ளது.

இன்றைய தினம், உங்களுக்கு தெரிந்த ஆண் நண்பர்கள், தம்பிகள், அண்ணன்கள், அப்பாக்கள் என அனைவரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டசை போய் பார்த்தால் தெரியும். அவர்களில் பெரும்பலோனோர் தனது மனைவிக்கு, அக்காவிற்கு, தங்கைக்கு, தோழிக்கு என குறைந்தது யாரவது ஒரு பெண்ணிற்காகவது பெண்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

எப்படி இது சாத்தியமானது என்றால் எவராலும் நம்ப முடியவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது என்று பலர் சொல்வதை கேட்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஆணாதிக்கமே, நமது மகளிர் தினத்தை கொண்டாடுவது நமக்கு கிடைத்த மற்றொரு வெற்றியல்லவா?

 

×Close
×Close