New Update
00:00
/ 00:00
பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் சாதனைகளை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
1911 ம் ஆண்டில் இருந்தே பெண்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு பாலின சமத்துவம் குறித்து பேசி வந்தாலும் இன்றும் ஒவ்வொரு நாளும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறாள், ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு பெண் வார்த்தை வன்முறையினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறாள், பணியிடத்தில் சம உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கிறாள், ஒரு ஆண் இன்னொரு ஆணை வசைபாடும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதோ ஒரு பெண் அவமானப்படுத்தப் பட்டு கொண்டிருக்கிறாள்.
நவீன உலகத்தில் பல துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான அச்சுறுத்தலும் அதிகமாகியிருக்கின்றன.
நேரடியாக சிக்கலைகளை எதிர் கொள்ளும் நேர்மறையான அணுகுமுறையினை பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்
பெண்கள் தன்னை தியாகியாக கட்டமைக்காமல், தன் சுயத்திற்காக நேரத்தினை செலவிட வேண்டும். தன்னால் செய்ய இயலாதவற்றை எந்த தயக்கமும் இன்றி முடியாது என்று சொல்லிப் பழக வேண்டும். இதை எல்லாம் சரி செய்து கொண்டாலே சராசரி வாழ்க்கையில் வரும் மன அழுத்தங்களில் இருந்து பெண்கள் விடுபட்டுவிட முடியும்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உங்கள் அன்னை, மனைவி, சகோதரி, தோழிக்கு அனுப்ப படங்கள், கவிதைகள், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இங்கே.
எல்லா நாளும் ஒரு சவால்,
எல்லா நாளும் ஒரு வாய்ப்பு.
நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும்
வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
உங்களுக்கு என் இனிய
மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
*There is no force more powerful than a woman’s determination to rise.
இன்பத்தை கருவாக்கினாள்
பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்
மகளிர் தின வாழ்த்துகள்
*Having you in my life makes me grateful and inspired every day! Happy Women’s Day
*The question isn’t who’s going to let me; it’s who is going to stop me.
இந்த அற்புதமான பெண்கள் தினத்தில்
என் அன்பான வாழ்த்துக்களை
உங்களுக்கு அனுப்புகிறேன்.
உங்கள் வாழ்க்கையில்
எல்லா வளமும்,
வெற்றியும் பெற்று
நல்வாழ்வு பெற வாழ்த்துக்கள்.
*Happy Women’s Day. I wish you all my luck. May the universe conspire to make things happen for you.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.